விஜய் நடிப்பில் உருவாகவிருக்கும் தளபதி – 65 படத்தில் ஹீரோயினாக 9 வருடங்கள் கழித்து அசின் அவர்கள் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் விஜய் தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் விஜய் அவர்களுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். எனவே தளபதியின் ரசிகர்கள் மாஸ்டர் படத்திற்காக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
மேலும் விஜய்யின் அடுத்த படமான 65வது படத்தை இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் போவதாகவும், அது துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகம் என்றும் தகவல் வெளியானது.மேலும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும், எஸ். தமன் இசையமைக்கவுள்ளதாகவும், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்வதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் மேலும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிப்பதாக பூஜா ஹெக்டே, ரஷ்மிகா மந்தனா, காஜல் அகர்வால் உள்ளிட்ட நடிகைகளின் பெயர்கள் அடிப்பட்டது. தற்போது தளபதி – 65ல் விஜய்க்கு ஜோடியாக அசின் அவர்கள் நடிக்கவுள்ளதாக தற்பொழுது ஒரு சிறிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகை அசின் அவர்கள் விஜய்யுடன் நடித்த போக்கிரி மற்றும் சிவகாசி ஆகிய படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட்டானதை தொடர்ந்து தற்போது மீண்டும் தளபதி 65 மூலம் 9 வருடங்கள் கழித்து நடிப்பதாக கூறப்படுகிறது . இந்த தகவல் மட்டும் உண்மையெனில் விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…