விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான அனைத்து படங்களும் அதிக அளவில் வசூலை பெற்று சாதனையும் படைத்தது. தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். தளபதியின் ரசிகர்கள் மாஸ்டர் படத்திற்காக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
மேலும் விஜய்யின் 65வது படத்தை இயக்க போவது யாரு என்ற சர்ச்சை நிலவி வந்த நிலையில், இயக்குநர் முருகதாஸ் தான் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க போவதாகவும் தகவல் வெளியானது.மேலும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது. அது மட்டுமின்றி துப்பாக்கி படத்தின் முதல் பாகத்தில் நடித்த காஜல் அகர்வால் தான் இரண்டாம் பாகத்திலும் நடிக்கவிருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றுவதற்கு பிரபல இசையமைப்பாளரான எஸ். தமன் அவர்கள் கையெழுத்து போட்டதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த செய்தி மட்டும் உண்மை யென்றால் விஜய்யுடன் தமன் இணையும் முதல் படம் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…
பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…