தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இவரது அடுத்த படம் குறித்த பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், தளபதி 65 படத்தை முருகதாஸ் அவர்கள் இயக்க போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதனை அதிகாரப்பூர்வமாக்குவதற்கான அனைத்து ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.
நான்காவது முறையாக முருகதாஸ் அவர்கள் தளபதி படத்தை இயக்க உள்ளதாகவும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்வதாகவும், எஸ். தமன் இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் மடோனா செபாஸ்டின் ஹீரோயினாக நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில் தற்போது தளபதி 65ல் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகம் என்று சமூகவலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி வைரலாகி வருகிறது அந்த வகையில் முருகதாஸ் அது துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகம் இல்லையென்றும் மிகவும் வித்யாசமான கதையாக இருக்கும் என்றும் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை: விடைத்தாளில் ஒரு சில மாற்றங்களை செய்து அறிமுகப்படுத்தியுள்ளதாக TNPSC அறிவித்துள்ளது. புதிய OMR விடைத்தாளின் மாதிரி பாடமானது www.tnpsc.gov.in…
சென்னை: பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது, மத்திய அரசு கொண்டு வந்த பல்கலைகழக நிதிநல்கைக் குழு தொடர்பான வரைவு நெறிமுறைகளை திரும்ப பெற…
டெல்லி : இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்திய அணியின் விக்கெட்…
சென்னை : பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 910 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய்…
கொல்கத்தா : ஆர்.ஜி.கர் என்கிற அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர் …
காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழக கட்சி தலைவர் விஜய் இன்று மேல்பொடவூரில் தனியார் மண்டப வளாகத்தில் பரந்தூர் விமான…