மிரட்டான டைட்டிலுடன் வெளியானது தளபதி 65 ஃபர்ஸ்ட் லுக்..!!
இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் திரைப்படம் “தளபதி 65”. உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.
படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் முடிவடைந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு கொரோனா பரவல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. விரைவில் மீண்டும் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நாளை ஜூன் 22 ஆம் தேதி விஜய் பிறந்த நாள் என்பதால் ரசிகர்கள் அனைவரும் தளபதி விஜயின் பிறந்த நாளை கொண்டாட ஆர்வத்துடன் காத்துள்ளார்கள். இதனை தொடர்ந்து விஜயின் பிறந்த நாளிற்கு தளபதி 65 படக்குழு பரிசளிக்கும் வகையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டிலை அறிவித்துள்ளனர்.
#Beast pic.twitter.com/VgMlmH1Gno
— Vijay (@actorvijay) June 21, 2021