தளபதி 65 – விஜய்க்கு ஜோடியாகும் கதாநாயகி யார் தெரியுமா?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 65 திரைப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொங்கலை முன்னிட்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. வசூல் ரீதியாக அதிகளவில் வரவேற்பை பெற்றுள்ள விஜயின் மாஸ்டர் படத்தை பல திரையுலக பிரபலங்களும் வாழ்த்தி வருகின்றனர். படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடித்து கலக்கி இருந்தார். இந்நிலையில் இந்த படம் வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் விஜய் இயக்குனர் நெல்சன் திலிப் குமார் அவர்களின் இயக்கத்தில் தனது 65வது படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதுடன் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அவர்களும் இந்த படத்தில் பணியாற்றுகிறார்கள். இந்நிலையில் தளபதி 65 படத்திற்கான படப்பிடிப்பு வருகிற பிப்ரவரி மாதம் தொடங்கப்படும் என படக்குழுவினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே அவர்கள் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.