நயன்தாரா நடித்த அறம் படத்தின் இரண்டாம் பாகத்தில் கீர்த்தி சுரேஷை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழி சினிமாக்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இந்த நிலையில், தற்போது அவர் மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிஸியாக உள்ளாராம். அவர் மலையாள சினிமாவின் சீனியர் நடிகரான மோகன்லால் அவர்களின் மரைக்கார்:அரபிக்கடலின்றே சிம்கம் படத்தில் நடித்து வருகிறார். மேலும் ரஜினியின் அண்ணாத்த படத்திலும் இணைந்துள்ளார் கீர்த்தி சுரேஷ். மேலும் நித்தீனுடன் RangDe என்ற தெலுங்கு படத்திலும், மிஸ் இந்தியா ஆகிய படங்களிலும் நடிக்கவுள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் உருவான பென்குயின் படம் ஓடிடியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது கோபி நைனார் இயக்கவிருக்கும் அறம் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கு கீர்த்தி சுரேஷிடம் அணுகியதாக கூறப்படுகிறது. கடந்த 2017ல் நயன்தாரா கலெக்டராக நடித்து ஆழ்த்துழை கிணற்றில் விழுந்த குழந்தையை காப்பாற்றும் கதையாக வெளியான திரைப்படம் ‘அறம்’. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு வசூலையும் பெற்றது. இரண்டாவது பாகத்திலும் நயன்தாரா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதனையடுத்து சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் பயனளிக்காத நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருவதாக கூறப்படுகிறது.. கீர்த்தி சுரேஷ் அறம்-2ல் நடிப்பது குறித்து விரைவில் தெரிய வரும்.
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…