“காமெடில நீங்க எப்பவும் கிங்”- வைகை புயலுக்கு வாழ்த்து கூறிய சேரன்.!

இன்று நடிகர் வைகை புயல் வடிவேலு தனது 61-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
தமிழ் சினிமாவில்அசைக்க முடியாத காமெடியன் என்றால் வைகைப்புயல் வடிவேலு என்று கூறலாம். கடந்த 1991-ஆம் ஆண்டு இயக்குனர் கஸ்தூரி ராசா இயக்கிய என் ராசாவின் மனசிலே என்ற திரைப்படத்தின் மூலமாகத் தமிழ்த் திரையுலகத்திற்கு அறிமுகமானார். தனது அசாத்தியமான நகைச்சுவை கலந்த நடிப்புத் திறமையால் ரசிகர்கள் அவரை “வைகைப்புயல்” என்று அழைத்தனர்.
கிட்டத்தட்ட 10 வருடங்களில் அவர் பெரிதாக எந்தவித படங்களில் நடிக்கவில்லை என்றாலும், அவருக்கான இடத்தை எந்த காமெடி நடிகராலும் அசைக்க கூட முடியவில்லை. இந்நிலையில் இன்று நடிகர் வடிவேலு 61-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில், இயக்குனர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில் ” பிறந்தநாள் வாழ்த்துக்கள் வடிவேலு அய்யா.. நம்பர் 6, விவேகானந்தர் தெரு, துபாய் குறுக்குச்சந்துல இருந்து பேசுறேன்.. நீங்க மறுபடி துபாய்க்கு வந்தது சந்தோசம்யா வாங்கய்யா பின்னலாம். நீங்க இல்லாம துபாய் ரோடே வெறிச்சோடி கிடக்குய்யா.. காமெடில நீங்க எப்பவும் ‘கிங்’..” என பதிவிட்டுள்ளார்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் வடிவேலு அய்யா.. நம்பர் 6, விவேகானந்தர் தெரு, துபாய் குறுக்குச்சந்துல இருந்து பேசுறேன்..
நீங்க மறுபடி துபாய்க்கு வந்தது சந்தோசம்யா வாங்கய்யா பின்னலாம். நீங்க இல்லாம துபாய் ரோடே வெறிச்சோடி கிடக்குய்யா.. காமெடில நீங்க எப்பவும் ‘கிங்’.. #HBDVadivelu pic.twitter.com/UkOWJbkNQj— Cheran (@directorcheran) September 12, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
மத கஜ ராஜா வசூலை மொத்தமாக எரித்த டிராகன்! 5 நாட்களில் இவ்வளவு வசூலா?
February 26, 2025
AFG vs ENG: இந்த டார்கெட்டை அடிச்சு காமிங்க! சதம் விளாசி இங்கிலாந்துக்கு பெரிய இலக்கு வைத்த இப்ராஹிம்!
February 26, 2025
முதல்ல அரசியல் நாகரிகத்தை கத்துக்கோங்க! விஜய்க்கு CPI மாநில செயலாளர் முத்தரசன் அட்வைஸ்!
February 26, 2025
இப்படியா விளையாடுவீங்க? பாகிஸ்தானை விளாசி தள்ளிய ஷோயிப் அக்தர்!
February 26, 2025