நான் சில திரைப்படங்களில் நடித்து வருவதால் என்னால் காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை என புகழ் கூறியுள்ளார்.
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் புகழ். இந்த நிகழ்ச்சியின் மூலம் தனக்கென்று ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றுக்கொண்டார். தற்போது அஜித்துடன் வலிமை, அருண் விஜய்யுடன் ஒரு திரைப்படம், சந்தானத்துடன் ஒரு திரைப்படம், விஜய்சேதுபதியுடன் ஒரு திரைப்படம், சிம்புவின் மாநாடு, அஸ்வினுடன் ஒரு திரைப்படமும் கைவசம் வைத்துள்ளார்.
இந்நிலையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியில், நடிகர் புகழ் கலந்துகொள்ள மாட்டார் என்று அவரே கூறப்படுகிறது. இது குறித்து புகழ் பேசுகையில், நான் சில திரைப்படங்களில் நடித்து வருவதால் என்னால் காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை. விரைவில் நான் கலந்து கொள்வேன். வலிமையோடு வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் நடிகர் புகழ் வலிமை படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. அவர் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…