வைட்டமின் “ஏ” அதிகம் நிறைந்த அவகோடா பழத்தின் மருத்துவ நன்மைகள் அறியலாம் வாருங்கள்..!
தென் அமெரிக்கா மெக்ஸிகோ மற்றும் மத்திய அமெரிக்கா ஆகிய இடங்களை பிறப்பிடமாகக் கொண்ட பட்டர் ஃப்ரூட் என அழைக்கப்படக் கூடிய பழம் தான் அவகோடா பழம். இந்த பழத்தில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இது குளிர்கால ஆப்பிள் எனவும் தென்னமெரிக்க நாடுகளில் அழைக்கப்படுகிறது. இந்த பழத்தில் அதிக அளவிலான சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இதில் உள்ள சத்துக்கள் மற்றும் அதை உண்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
சத்துக்கள்
அவகோடாவில் அதிக அளவில் கொழுப்பு சத்து உள்ளது. மேலும், இதில் மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே, வைட்டமின் b6 மற்றும் கார்போஹைட்ரேட் ஆகியவை அடங்கியுள்ளது.
நன்மைகள்
அவகோடா பழத்தை சாப்பிடுவதால் மூட்டுவலியால் அவதிப்படுபவர்களுக்கு நிச்சயம் நல்ல தீர்வு கிடைக்கும். மூட்டு பகுதிகளில் ஏற்படக்கூடிய எலும்பு தேய்மானத்தை போக்குவதற்கும் இந்த பழம் உதவுகிறது. மேலும் இந்த பழத்தில் அதிக அளவு எண்ணெய் சத்துக்கள் நிறைந்து காணப்படுவதால், வறண்ட சருமம் உள்ளவர்கள் இந்த பழத்தை அதிகம் எடுத்துக் கொள்ளலாம். இது முகத்தை பளபளப்பாக மாற்றுவதற்கும் உதவுகிறது.
மேலும் முக்கியமாக சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை நீக்குவதற்கு இந்தப் பழம் பெரிதும் உதவுகிறது. சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை நீக்குவதற்கு அவகோடா பழம் பெரிதும் உதவுகிறது. மேலும் உடல் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த இந்த பழம் உதவுகிறது. செரிமான உறுப்புகளில் ஏற்படக் கூடிய கோளாறுகளையும் இது சரி செய்கிறது. இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் குறைந்து, நல்ல கொழுப்புக்களின் அளவை அதிகரிக்கும்.
மேலும் இதில் பொட்டாசியம் சத்து அதிகம் இருப்பதால் ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்களுக்கும் இது ஒரு நல்ல பலன் கொடுக்கும். மேலும் இதிலுள்ள சேர்மங்கள் காரணமாக எலும்பு பிரச்சனைகளை சரி செய்கிறது. என ஆய்வின் மூலமாகவே நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் இது கண்களின் பார்வைத் திறன் மற்றும் கண்களில் புரை வளருதல் ஆகியவற்றை கட்டுப்படுத்த உதவுகிறது. இது மட்டுமல்லாமல் புற்றுநோய் போன்ற கொடிய நோய்களை நீக்குவதில் கூட அவகோடா பெரும் பங்காற்றுகிறது. இதை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.