எலுமிச்சை பழத்தின் எண்ணில்லா நன்மைகள் அறிவோம் வாருங்கள்!
சாதாரணமாக நாம் சமையலுக்கு புளிப்பு சுவைக்காகவும், வாசனைக்காகவும் பயன்படுத்தக்கூடிய எலுமிச்சை பழத்திலுள்ள எண்ணற்ற ஆரோக்கியமான நன்மைகளை அறியலாம் வருங்கள்.
எலுமிச்சை பழத்தின் எண்ணில்லா நன்மைகள்
பெண்கள் தங்களை அழகுபடுத்துவதற்க்காக அழகு நிலையங்கள் செல்வதை தவிர்த்து கடலை மாவுடன் எலுமிச்சை சாற்றை கலந்து பயன்படுத்தினால் முகத்திலுள்ள கரும்புள்ளிகள் மறைந்து முகம் பளபளக்கும். எலுமிச்சையிலுள்ள வைட்டமின் சி சாது நமது உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலுக்கு வலுவை தரும்.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தாராளமாக எலுமிச்சை சாற்றை எடுத்து கொள்ளலாம். இதிலுள்ள பெக்டின் எனும் அமிலம் பசியை குறைக்கும் தன்மை கொண்டது. உடலில் அமிலப் பண்புகள் அதிகரிக்கும் போது நமக்கு உடல் நலக் குறைவு ஏற்படுகிறது. எலுமிச்சையில் உள்ள அல்கலைன் பண்புகள், இந்த உடல் நலக் குறைவு ஏற்படாமல் தவிர்த்து விடும்.