கபல்பதி பிராணயாமா செய்வதால் ஏற்படும் 6 நன்மைகள் அறியலாம் வாருங்கள்…!

Published by
Rebekal

நமது முன்னோர்கள் கண்டறிந்ததில் மிகச்சிறந்த ஒன்று யோகா. இதன் மூலமாக நமது உடல், மனம் ஆரோக்கியம் பெற உதவுவதுடன் உடலில் உள்ள அனைத்து நோய்களையும் இது தீர்க்கவும் இந்த யோகாசன முறைகள் உதவுகிறது. உங்களுக்கு கபல்பதி பிராணயாமா செய்வதன் மூலம் கிடைக்கக் கூடிய நன்மைகள் தெரியுமா? இந்த மூச்சுப் பயிற்சி உடலில் உள்ள நச்சு கிருமிகளை அழிப்பதற்கு மிகவும் உதவுகிறது. இதனால் கிடைக்கக் கூடிய ஆரோக்கியமான 6 நன்மைகள் குறித்து நாம் தெரிந்து கொள்ளலாம்.

பதட்டம்

இந்த கபல்பதி பிராணயாமாவை தவறாமல் தினமும் செய்து வருவதன் மூலமாக நமது மன அழுத்தம், மனச்சோர்வு, பதட்டம் ஆகியவற்றில் இருந்து விடுபட்டு மனமகிழ்ச்சியுடன் நிம்மதியாக வாழ முடியும். இது மட்டுமல்லாமல் மனதை அமைதியாக வைக்க விரும்புவர்கள் கூட இந்த கபல்பதி பிராணயாமாவை செய்யலாம்.

ஆற்றல்

இந்த கபல்பதி எனும் மூச்சுப்பயிற்சியை செய்வதன் மூலமாக, செரிமான அமைப்பு சீராக இயங்க உதவுகிறது. மேலும், நமது கல்லீரல், சிறுநீரகம் ஆகியவை தங்கள் வேலையை சரியாக செய்வதற்கும் இது மிகவும் உதவுகிறது. இது மட்டுமல்லாமல் குடல் தொடர்பான பிரச்சினைகளை நீக்க இது உதவுகிறது.

கருவளையம்

இந்த கபல்பதி மூச்சுப்பயிற்சியை செய்வதன் மூலமாக கண்களின் கீழ் உள்ள கருவளையம் நீங்குவதற்கு இது மிகவும் உதவுகிறது. இதை தொடர்ந்து செய்வதன் மூலம் நமது பதற்றம் மாறுவதால் கண்களில் உள்ள கருவளையம் போய்விடும் எனவும் கூறப்படுகிறது.

இரத்த ஓட்டம்

இந்த மூச்சுப்பயிற்சியை தொடர்ந்து செய்வதன் மூலமாக நமது உடலில் இரத்த ஓட்டம் சரியாக இயங்குகிறது. மேலும் நமது உடலின் அனைத்து பாகங்களும் அதன் வேலையைச் சிறப்பாகச் செய்வதற்கு இது உதவுகிறது.

கருவுறுதல்

இந்த கபல்பதி மூச்சு பயிற்சி செய்வதன் மூலமாக பெண்கள் கருவுறுவதற்கு பெரிதும் உதவுகிறது. மேலும் இது பெண்கள் உடலுறவின் போது உற்சாகமாக இருக்கவும், பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கவும் உதவுகிறது.

முக அழகு

இந்த மூச்சுப்பயிற்சியை தொடர்ந்து தினமும் செய்து வருவதன் மூலம் உடலில் உள்ள வெப்பம் தணிய உதவுகிறது. மேலும், முகம் பளபளபடையவும் இது பெரிதும் உதவுகிறது.

Published by
Rebekal

Recent Posts

Live : அமெரிக்க அதிபர் தேர்தல்: டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை!

Live : அமெரிக்க அதிபர் தேர்தல்: டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை!

சென்னை : அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்வு செய்யும் தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கி, வெற்றி…

19 mins ago

உறுதியானது ஐபிஎல் மெகா ஏல தேதிகள்! பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பு!

சவுதி : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு என்பது இருந்து வந்தது. இந்த நிலையில்,…

23 mins ago

குடை முக்கியம்!! “சென்னையில் டூ டெல்டா வரை.. கடலோர மாவட்டங்களில் மழை” – பிரதீப் ஜான் தகவல்.!

சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

36 mins ago

நடிகை கஸ்தூரி கைது? சர்ச்சைப் பேச்சுக்கு 4 பிரிவுகளின் கீழ் ழக்குப் பதிவு.!

சென்னை : தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என்ற நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…

10 hours ago

நாளை இந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

நாகப்பட்டினம் : நாகை மற்றும் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை (நவ.06] உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கல் சிங்காரவேலர்…

10 hours ago

“2026ல் நம்மை எதிர்த்து யார் வந்தாலும் திமுகவுக்கு தான் வெற்றி” – உதயநிதி ஸ்டாலின் சூளுரை.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த போது, துணை…

11 hours ago