நாங்க இந்தியாவே இல்லனு எழுதிக்கோ போ”!
க/பெ ரணசிங்கம் படத்தின் டிரைலரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதி தற்பொழுது மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார் அதனை தொடர்ந்து அவர் நடித்த கடைசி விவசாயி மாமனிதன் போன்ற திரைப்படங்கள் விரைவில் திரைக்கு வரவுள்ளது இந்த நிலையில் அந்த வரிசையில் மற்றோன்று க/பெ ரணசிங்கம். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். குணச்சித்திர நடிகரான பெரிய கருப்புத்தேவர் அவர்களின் மகனான விருமாண்டி இயக்கும் இந்தப் படத்தில் வேலராமமூர்த்தி, பவானி ஸ்ரீ, சமுத்திரக்கனி உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
மேலும் இந்த நிலையில் ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் நேற்று 5 மணிக்கு வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நேற்று வெளியிட்டிருந்தார் அதை போல் தற்பொழுது இந்த படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளார்.
#KaPaeRanasingam teaser herehttps://t.co/Z4rgwCauGj@kjr_studios @aishu_dil @pkvirumandi1 @GhibranOfficial @shan_dir @eka_dop @Vairamuthu @EditorShivaN @PeterHeinOffl @RangarajPandeyR @artilayaraja @Arunrajakamaraj @BhavaniSre @PreethiNedu @LahariMusic @onlynikil
— VijaySethupathi (@VijaySethuOffl) May 23, 2020