மாதுளையின் மகத்தான மருத்துவ குணங்கள் அறியலாம் வாருங்கள்!

Published by
Rebekal

இயற்கையில் நமக்கு வரமாக கிடைத்துள்ள பழங்கள் நமது உடலிலுள்ள நோய்கள் மற்று தேவையற்ற கிருமிகளை அழிக்கக்கூடிய குணநலன்கள் நிறைந்துள்ளது. அதிலும் மாதுளம்பழத்தில் உள்ள மிகச்சிறந்த சத்துக்கள் சிலவற்றை பார்க்கலாம் வாருங்கள்.

மாதுளையின் நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள்

மாதுளம் பழத்தில் பழம் மட்டுமல்லாமல் அதன் பூ, பட்டை ஆகிய அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்தது தான். மாதுளை பழத்தில் இரும்பு சர்க்கரை சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புகள் மற்றும் பல்வேறு உயிர் சத்துக்கள் அடங்கியுள்ளது. இந்த மாதுளம் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வருவதல் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், ரத்த அளவும் அதிகரிக்கும். இந்தப் பlழத்தில் காணப்படக்கூடிய அதிக அண்டிஆக்சிடன்ட்ஸ் காரணமாக உடலில் ஏற்படக்கூடிய புற்றுநோய் செல்கள் ஆன பிரீரேடிகல் செல்களை அழிக்க இது உதவுகிறது. மேலும் உடலில் உள்ள செல்கள் சிதைவுறாமல் பாதுகாக்கவும் இது பயன்படுகிறது.

மாதுளம் பழத்தை அதிக அளவில் குழந்தைகளுக்கு சாப்பிட கொடுப்பது மிகவும் நல்லது. ஏனென்றால், இந்த பழத்தில் அதிக அளவு நினைவாற்றல் மற்றும் கற்கும் திறனை கொடுக்கக் கூடிய சக்தி உள்ளது. குடல் வீக்கங்கள் செரிமான கோளாறுகளை போக்குவதுடன் இதனால் குடலில் உள்ள புண் மற்றும் வயிற்று புண்ணாகி ஆறும். உடலின் ஆக்சிஜனேற்ற அழுத்தங்களை கட்டுப்படுத்துவதன் மூலம் திசுக்கள் சிதைவுராமல் பாதுகாக்கிறது. மேலும் ரத்த அழுத்தம் குறைக்க இந்த மாதுளம் பழம் மிகவும் பயன்படுகிறது. இதயம் சார்ந்த பிரச்சனைகளையும் தீர்க்க வல்லது, கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தி இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மார்பகப் புற்றுநோய் வராமலும் காக்கிறது, உடல் எடையை குறைக்க விரும்புபவர்களும் இந்த பழத்தை தங்களது டயட்டில் சேர்த்துக் கொள்ளலாம்.

மாதுளையில் உள்ள விதைகள் உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்க உதவுவதுடன் இதில் உள்ள பாலிபீனால் என்ற ஆன்டிஆக்சிடன்ட் உடல் எடையை குறைக்க உதவுகிறது. மேலும் சர்க்கரையினால் ஏற்படக்கூடிய உடல் எடை இதில் உள்ள சர்க்கரையினால் ஏற்படாது. ஏனென்றால் இதில் உடலில் கலோரிகளை அதிகரிக்கச் செய்யாது. மேலும் கர்ப்பிணிகள் மாதுளம் பழத்தை தொடர்ந்து சாப்பிடுவது மிகவும் நல்லது. இதிலுள்ள விட்டமின் ஏ சி ஈ மற்றும் போலேட் ஆகிய சத்துக்கள் காரணமாக கர்ப்பிணிகளின் உடலில் இரும்பு சத்து அதிகரிக்க இது உதவுகிறது.

குழந்தைக்கு தேவையான ரத்த உற்பத்திக்கும் துணைபுரிகிறது. மேலும் கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய உயர் ரத்த அழுத்தத்தை கட்டுபடுத்த இது உதவுகிறது. நஞ்சு கொடி சார்ந்த பிரச்சினை மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் ஆகியவற்றையும் தடுக்க உதவுகிறது. இரத்த சோகை நோய் ஏற்படாமல் கண்களை பாதுகாக்கிறது. இந்த பழத்தில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து காரணமாக செரிமானம் நன்முறையில் நடைபெற உதவும். மலச்சிக்கலைத் தடுக்கும் மேலும் கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய தசைபிடிப்பு நீங்க உதவுவதுடன் இதில் உள்ள போலிக் சத்தால் கருவில் உள்ள குழந்தையின் மூளை வளர்ச்சி மற்றும் நரம்பு வளர்ச்சி நன்முறையில் இருக்கும்.

Published by
Rebekal

Recent Posts

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : திமுக சார்பில் வி. சி.சந்திரகுமார் போட்டி!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : திமுக சார்பில் வி. சி.சந்திரகுமார் போட்டி!

ஈரோடு :  காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…

12 minutes ago

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி – பானை சின்னம் வழங்கிய தேர்தல் ஆணையம்!

சென்னை : நாம் தமிழா் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக இந்திய…

37 minutes ago

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக போட்டி – செல்வப்பெருந்தகை அறிவிப்பு!

ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…

1 hour ago

“ஹிந்தி தேசிய மொழி இல்லை…அஸ்வின் சொன்னது சரி தான்” – அண்ணாமலை!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் ஜனவரி 9-ஆம்…

2 hours ago

கிடைத்தது முக்கிய அங்கீகாரம்… இனி நாம் தமிழர் கட்சியும் ஒரு மாநில கட்சி!

சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…

10 hours ago

த.வெ.க மாவட்ட செயலாளர்கள் நியமன குழப்பம்! அடுத்தடுத்த நகர்வுகள் என்ன?

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…

11 hours ago