அன்னாசி பழத்தின் நன்மை மற்றும் தீமைகள் அறியலாம் வாருங்கள்!
அட்டகாசமான சுவையுடன் இயற்கை வரமாகவும் சத்துள்ள உணவாகவும் கிடைத்துள்ள அன்னாசி பழத்தில் உள்ள நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து அறியலாம் வாருங்கள்.
அன்னாசி பழத்தில் உள்ள நன்மைகள்
அன்னாசி பழத்தில் அதிகப்படியான புரோட்டீன், நார்ச்சத்து, வைட்டமின் சி, பீட்டா கரோட்டின், வைட்டமின் பி5, தயாமின், பொட்டாசியம், காப்பர், மக்னீசியம் கால்சியம் நிறைந்துள்ள இந்த அன்னாச்சி பழத்தை தேனில் கலந்து சாப்பிட்டுவர உடல் பலம் கூடுவதுடன் உடல் அழகும் கிடைக்கும். சிறுநீரக கற்கள் கரைய இது உதவுவதுடன் இதயக்கோளாறு மற்றும் இதய பலவீனம் நீங்கவும் உதவுகிறது. ஒரு நாள் ஒன்றுக்கு நான்கு வேளை ஒரு அவுன்ஸ் வீதம் இதை சாப்பிட்டு வரும்பொழுது இடுப்பு வலி உள்ளவர்கள் நிச்சயம் குணமடையலாம். தொண்டை வலி நீங்குவதுடன், மூக்கு ஒழுகுதல் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும் சக்தி கொண்டது. இதில் வைட்டமின் ஏ, பி, சி சத்துகள் நிறைந்து காணப்படுவதால் அதிகப்படியான நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ளது. மஞ்சள் காமாலை உள்ளவர்கள் இதை சாப்பிட்டு வரும் பொழுது உடலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
தயாமின் மற்றும் வைட்டமின் சி காரணமாக சளித்தொல்லை விலகுவதுடன் ப்ளூ காய்ச்சல் எனும் அரிய காய்ச்சலில் இருந்தும் விடுபடலாம். மேலும் இதய நோய் மற்றும் மாரடைப்பு வராமல் பாதுகாப்பதுடன், பெண்களுக்கு ஏற்படக்கூடிய வெள்ளைப்படுதல் மற்றும் சிறுநீர் எரிச்சல் போன்றவையும் குணமாகும். நார்சத்து அதிகம் இந்த பழத்தில் காணப்படுவதால், இளம் பெண்கள் அனைவரும் தொப்பையை குறைக்க இதனை பயன்படுத்தலாம். மேலும் மூளை கோளாறு மற்றும் ஞாபக சக்தியை அதிகரிப்பதுடன் இதில் உள்ள மெக்னீசியம் மற்றும் கால்சியம் காரணமாக எலும்பு மண்டலத்தையும் வலுப்படுத்துகிறது. வைட்டமின் ஏ சத்து காரணமாக பார்வை குறைபாடு ஏற்படாமல் தடுக்கிறது.
அன்னாசியின் தீமைகள்
அன்னாசி பழத்தில் இயற்கையாகவே சர்க்கரை தன்மை அதிகம் அடைந்துள்ளதால் சர்க்கரை நோயாளிகள் இதனை அதிகம் சாப்பிடக்கூடாது. மேலும் அன்னாசிப் பழத்தை அப்படியே சாப்பிடுவது மிக நல்லது. ஆனால் பழுத்த அன்னாசி பழத்தை சாப்பிடுவதால் உடலுக்கு தீங்கு நேரிடும். இதிலுள்ள அமிலம் காரணமாக பற்களில் உள்ள எனாமல் மீது எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்துவதால் பல் சம்பந்தப்பட்ட கோளாறுகள் ஏற்படவும் வழி வகுக்கிறது. மேலும் கர்ப்பிணிகள் ஆரம்ப காலகட்டத்தில் இதனை சாப்பிடக்கூடாது, இதனால் கருச்சிதைவு ஏற்படும். லேசான அலர்ஜிகள் இருப்பவர்கள் அன்னாசிப் பழத்தை சாப்பிடக்கூடாது இதன் காரணமாக அதிக அளவில் உருவாகும்.