நிலத்திற்கு அடியில் விளையக்கூடிய கிழங்கு, கடலை வகைகள் உடலுக்கு சத்து அளித்தாலும் அதன் மூலமாக வேறு ஏதேனும் பாதிப்புகள் இருக்கும் என்றுதான் அனைவரும் கருதுகிறோம். ஆனால் சர்க்கரை வள்ளி கிழங்கு பல நன்மைகளை கொண்டது. அதன் சுவை மட்டுமல்லாமல் அதில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளும் மருத்துவ குணங்களும் நிறைந்து உள்ளது. அவற்றை பற்றி அறியலாம் வாருங்கள்.
சர்க்கரைவள்ளிக் கிழங்கில் வைட்டமின் ஏ, பி, சி பொட்டாசியம், மெக்னீசியம் நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட், இரும்பு, கால்சியம் மற்றும் அதிக அளவிலான கலோரிகள் நிறைந்து காணப்படுகிறது. இந்த சர்க்கரைவள்ளிக் கிழங்கில் அதிக அளவில் கொழுப்பு இல்லாததால் உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் பயமின்றி சாப்பிடலாம். மேலும் இதில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இதனால் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுப்பதுடன் குடல் சம்பந்தப்பட்ட கோளாறுகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது. மேலும் இது உடலில் கெட்ட கொழுப்புகள் சேராமல் தடுக்கிறது. இளமையான தோற்றம் பெற விரும்புபவர்கள் சர்க்கரை வள்ளிக்கிழங்கை பயன்படுத்தலாம்.
இதிலுள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்ஸ் காரணமாக உடலில் உள்ள பிரீ ரேடிக்கல் செல்களை தடுக்கும். மேலும் உடலை இளமையுடன் வைத்திருக்கும். கர்ப்பிணி பெண்கள் சர்க்கரை வள்ளிக்கிழங்கை நிச்சயம் தொடர்ந்து சாப்பிடலாம். கரு வளர்ச்சிக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமையும், இதில் உள்ள சத்து காரணமாக கரு வலுப்பெறும். கருத்தரிக்க விரும்புவர் முதல் கர்ப்பிணிகள் வரை சர்க்கரை வள்ளிக்கிழங்கை நிச்சயம் உண்ணலாம். மேலும் இந்த சர்க்கரைவள்ளிக் கிழங்கில் அதிக அளவில் பீட்டா, கரோட்டின், வைட்டமின் சி, வைட்டமின் பி, காம்ப்ளக்ஸ் இரும்பு சத்து நிறைந்துக் காணப்படுவதால் நோயெதிர்ப்பு மண்டலம் வலுப்பெறுவதுடன் உடலை நோய் எதிர்ப்பு சக்தியுடன் பாதுகாக்கிறது. ஆரோக்கியமான உடல் உருவாகவும் வழிவகுக்கிறது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…