கொய்யா பழத்தின் கணக்கில்லா நன்மைகள் அறியலாம் வாருங்கள்!
இயற்கையில் நமக்கு வரமாக கொடுக்கப்பட்டுள்ள பழங்கள் அனைத்துமே நமது வாழ்நாளில் நமக்கு தேவையான சத்துக்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. அது போல கொய்யாபழத்தில் என்னென்ன நன்மைகள் உள்ளது மற்றும் மருத்துவ குணங்கள் உள்ளது என்பது பற்றி அறியலாம் வாருங்கள்.
கொய்யாவின் நன்மைகள்
கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி அளவு மிக அதிகமாக உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகம் தருவதுடன் சாதாரணமான நோய்க் கிருமிகளின் தொற்றிலிருந்தும் இருந்தும் நம்மை பாதுகாக்க உதவுகிறது. இந்த பழத்தில் புற்றுநோய் செல்களை தடுக்கக்கூடிய லைகோபின் எனும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற நடைபெறுவதால் மார்பக புற்று நோய் முற்றிலுமாக தடுக்கப்படுகிறது. நீரிழிவு நோயாளிகள் இந்தப் பழத்தை சாப்பிட்டு வரும் பொழுது விரைவில் நீரிழிவு நோய் குணமடைகிறது. மேலும் பொட்டாசியத்தின் அளவு அதிகமுள்ளதால், இரத்த அழுத்தம் கொண்டவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதுடன் ஆரோக்கியமான இதயம் உருவாக காரணமாகிறது. நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கலைப் போக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது. இந்த பழத்தில் அதிகம் வைட்டமின் ஏ இருப்பதால் கண்பார்வை குறை பாடுகளை தடுக்கிறது.
வைட்டமின் பி9 இந்தப் பழத்தில் அதிகம் இருப்பதால் கர்ப்ப காலத்தில் இது சாப்பிடும் பொழுது குழந்தையின் நரம்பு மண்டலம் வளர்ச்சி அடைய உதவுகிறது. இந்த பழத்தில் உள்ள வைட்டமின் பி6 மூளைக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதுடன் மன அழுத்தத்தையும் குறைக்கிறது. பல்வலிக்கு எதிராகப் போராடுவதில் கொய்யாப்பழம் மிகுந்த பங்காற்றுகிறது. மேலும் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கொய்யாப்பழம் சாப்பிடலாம். இருமல் சளியில் இருந்து விடுதலை அளிப்பதுடன் ஸ்கர்வி போன்ற மரபணு குறைபாடுகள் வராமல் தடுக்கிறது. மேலும் தைராய்டு உள்ளவர்கள் இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது தைராய்டு உருவாவதற்கு காரணமான அமிலங்களை தடுத்து ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படுவதை கட்டுப்படுத்தி ஆரோக்கியமாக வைக்க உதவும்.