நீளமான தலை முடி வளர சில இயற்கையான வழிமுறைகள் அறியலாம் வாருங்கள்..!

Published by
Rebekal

பெண்கள் பலரும் தங்களுக்கு நீளமான அடர்த்தியான கருமை நிறம் கொண்ட கூந்தல் வேண்டும் என விரும்புவது வழக்கமான ஒன்று தான். தற்போதைய காலத்தில் ஆண்களே முடி நீளமாக வளர்த்து மாடலாக இருக்க வேண்டும் என்று விரும்பும் நிலையில் பெண்கள் முடி இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும்? பெண்கள் வீட்டிலேயே இயற்கையான சில குறிப்புகளை பயன்படுத்தி நீளமான கருமையான முடி வளர்வதற்கான வழிமுறைகள் அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.

கற்றாழை

நமது உடலில் உள்ள வெப்பம் தான் முடிவு உதிர்வுக்கு முக்கிய காரணம் ஆகிறது. இந்த வெப்பத்தை தணிப்பதற்கு முக்கிய பங்காற்றுவது கற்றாழை தான். கற்றாழையை நீளவாக்கில் வெட்டி அதன் உள்ளிருக்கும் ஜெல் பகுதியை உங்கள் உச்சந்தலையில் தடவி 40 நிமிடங்கள் கழித்துக் கூந்தலை அலசி விடுவதன் மூலம் கூந்தல் உடையாமல் பாதுகாப்பாக இருப்பதுடன் உடல் உஷ்ணத்தால் ஏற்படக் கூடிய முடி உதிர்வும் தவிர்க்கப்படுகிறது.

வெந்தயம்

பெரும்பாலும் நமது சமையலில் அதிகம் பயன்படுத்தப்பட கூடிய வெந்தயம் உடல் குளிர்ச்சிக்காக உணவுகளுடன் பயன்படுத்தப்படுகிறது. இந்த வெந்தயம் முடி உதிர்வை தவிர்ப்பதுடன், மீண்டும் முடி நன்றாக கருமையாக வளர்வதற்கு உதவி செய்கிறது. இந்த வெந்தயத்தை என்ன செய்ய வேண்டும் என்றால், இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் வெந்தயத்தை எடுத்து நன்றாக வறுத்து தூள் செய்து வைத்துக் கொள்ளவும். பின்பு இதை பேஸ்ட் போல குழைத்து நமது உச்சந்தலையில் 20 முதல் 30 நிமிடங்கள் வரை வைத்திருந்து அதன் பின்னதாக நம் தலையை அலசி விட வேண்டும். இவ்வாறு நாம் தொடர்ந்து செய்து வருவதன் மூலமும் முடி உதிர்வு தவிர்க்கப்படும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் பெரும்பாலும் நாம் பயன்படுத்தக்கூடிய ஒன்றாக இருந்தாலும், நமது முடி உதிர்வதற்கு காரணமான உடல் உஷ்ணத்தை தவிர்ப்பதற்கு தேங்காய் எண்ணையை லேசாக சூடு செய்து அதனை உச்சந்தலையில் தடவி மசாஜ் செய்வதன் மூலம் கூந்தல் உதிர்வதைத் தடுக்க முடியும்.

குறிப்பாக நாம் குளிக்கும் பொழுது குளிர்ந்த நீரில் குளித்தால் நமது கூந்தல் உடைவு மற்றும் உதிர்வு பிரச்சினைகள் ஏற்படாது. காரணம் வெந்நீர் வைத்து குளிக்கும் பொழுது தான் நமது முடிகள் உதிரத் தொடங்குகிறது. குளிர்ந்த நீர் ரத்த ஓட்டத்தை தூண்டி முடி நீளமாக வளர்வதற்கு உதவுகிறது. எனவே முடிந்தவரை குளிர்ந்த நீரில் தலையை கழுவுங்கள்.

Published by
Rebekal

Recent Posts

”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!

ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…

7 hours ago

‘முடிவெடுப்பது நான் அல்ல’.., ஒருவழியாக ஓய்வு குறித்து மௌனம் கலைத்த தோனி.!

சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…

8 hours ago

டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!

கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…

8 hours ago

“அவர்களுக்கு அழ மட்டுமே தெரியும்”.., யாரை சொல்கிறார் பிரதமர் மோடி.?

ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார்.  பாம்பனில் கடலுக்கு நடுவே…

9 hours ago

திறப்பு விழா அன்றே பழுது..! பிரதமர் மோடி திறந்து வைத்த பாம்பன் பாலத்தின் தற்போதைய நிலை என்ன?

ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…

10 hours ago

உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இந்த 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

12 hours ago