பல்லிலுள்ள மஞ்சள் கறை நீங்க சில இயற்கை வழிமுறைகள் அறியலாம் வாருங்கள்..!

Default Image

தற்பொழுது பலருக்குமே பெரும் பிரச்சனையாக இருப்பது பற்களில் உள்ள மஞ்சள் கறை தான். இந்த மஞ்சள் கறைகளால் பிறர் முன்பு துணிவாக சிரித்து பேசுவதற்கு கூட அச்சப்பட வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. பற்களில் மஞ்சள் கறை உருவாவதற்கான காரணம் என்ன தெரியுமா?

நமது பல்லின் வெளிப்புற பகுதிக்கு எனாமல் என்று பெயர். இந்த எனாமலுக்கு அடுத்த பகுதி தான் டென்டின். இந்த டென்டின் என்ன நிறத்தில் அமைகிறதோ அதுவே ஒருவரின் பல்லின் நிறம். சிலருக்கு டென்டினே சற்று பழுப்பு நிறத்தில் இருக்கும். இது நிரந்தரமானது. ஆனால், எனாமலுக்கு மேலே மஞ்சள் நிற படிவம் தோன்றும். இதனை போக்க முடியும்.

ஆனால், இதற்காக நாம் செயற்கையான க்ரீம்களை உபயோகித்தோமானால் அது நமது எனாமல்களை நாளடைவில் பாதிப்புக்குள்ளாக்கி விடும். எனவே இயற்கையாக நாம் சில வழிமுறைகளை வீட்டிலேயே கடைபிடிக்கும் பொழுது சுலபமாக பற்களின் மஞ்சள் கறையை நீக்க முடியும். அவைகள் என்ன என்பது குறித்து அறியலாம் வாருங்கள்.

பல் துலக்குதல்

ஒரு நாளில் கட்டாயம் இரண்டு வேளைக்கு பல் துலக்க வேண்டும். அதிலும் குறிப்பாக நாம் பல் துலக்கும்போது பற்பசைகளை உபயோகிப்பதே நல்லது தான். ஆனால் அதிக நேரம் பற்பசை வைத்து பற்களை தேய்க்க கூடாது. இதனால், பற்களில் உள்ள எனாமல் பாதிக்கப்படும். மேலும் மஞ்சள் கரை ஏற்படுத்தக் கூடிய உணவுகளை நாம் சாப்பிட்டதும் உடனடியாக நாம் பற்களை துலக்குவது மிகவும் நல்லது.

teeth

நாம் பல் துலக்கும்போது பற்களின் இடைவெளிகளில் பிரஷ் கொண்டு நன்றாக துலக்க வேண்டும். மேலும் நாம் உணவுகளை சவைத்து சாப்பிடக் கூடிய பல்லின் மேற்பரப்பில் அதிக அளவில் பிரஷ் செய்ய வேண்டும். பல்லின் உள்ளே, வெளியே, மேலே, கீழே என அனைத்து பக்கங்களிலும் பற்களை துலக்க வேண்டும். இவ்வாறு பல் துலக்குவதன் மூலம் ஆரம்பத்திலேயே மஞ்சள் கறைகள் உருவாகுவதை தவிர்க்கலாம்.

பேக்கிங் சோடா மற்றும் ஹைட்ரஜன் பெராக்ஸைடு

பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை நீக்குவதில் ஹைட்ரஜன் பெராக்ஸைடு  மற்றும் பேக்கிங் சோடா பெரும் பங்காற்றுகிறது. இந்த பேக்கிங் சோடாவை பற்பசையின் மீது தூவி பயன்படுத்தலாம். அது போல ஹைட்ரஜன் பெராக்ஸைடை பஞ்சில் தொட்டு பற்களில் சுற்றி தேய்த்து விடலாம். ஆனால் இவற்றை வாரம் ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஏனென்றால், தொடர்ந்துஅடிக்கடி பயன்படுத்தும் பொழுது பற்களில் உள்ள எனாமல் கரைந்து விடும்.

teeth

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயை பஞ்சில் தொட்டு பற்களை நன்றாக சுத்தப்படுத்தும் பொழுது பற்களில் உள்ள பாக்டீரியாக்களை இது நீக்குவதாக கூறப்படுகிறது. மேலும் பற்களை வெண்மையாக்கவும் இது உதவுகிறது. இதற்கு ஒன்று முதல் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெயை எடுத்து வாயில் 10 நிமிடங்கள் வரை வைத்துவிட்டு துப்பி விட வேண்டுமாம். அதன் பின்பு வாயில் தண்ணீரை ஊற்றி கொப்பளித்து விட வேண்டும்.

ஆப்பிள் சிடர் வினிகர்

ஆப்பிள் சிடர் வினிகரை தண்ணீரில் கலந்து 30 வினாடிகள் வாய் கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு பல் துலக்கிய பின்பு வாரம் ஒரு முறை செய்து வந்தாலே பற்களில் உள்ள மஞ்சள் கறை நீங்கி விடும். ஆனால், இந்த வினிகரும் பற்களின் எனாமலுக்கு தீங்கு விளைவிக்க கூடியது தான் எனவே அடிக்கடி உபயோகிப்பதை தவிர்ப்பது நல்லது.

apple

எலுமிச்சை தோல்

எலுமிச்சை பழம், வாழை பழம் அல்லது ஆரஞ்சுப் பழ தோலை வைத்து பற்களை தேய்த்தால் பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் விரைவில் நீங்கும். இது இயற்கையான முறை என்பதால் வாரம் இரு முறை இதைச் செய்யலாம்.

கரி

பற்களில் உள்ள கறையை நீக்குவதில் கரி பெரிதும் பயன்படுகிறது. இது பற்களை வெண்மையாக்க உதவுவது மட்டுமல்லாமல் பாக்டீரியாக்களை அழிக்கவும் இது உதவுகிறது. இதை தான் நமது முன்னோர்கள் பல் துலக்க பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்பொழுது காலம் மாற மாற காலத்திற்கேற்ப பற்பசைகளை உபயோகிக்க ஆரம்பித்துவிட்டோம்.

இந்த கரிகளை வைத்து பல் துலக்கும் பொழுது அதிக நேரம் எடுக்க கூடாது, அழுத்தம் கொடுத்தும் துலக்கக் கூடாது. சாதாரணமாக துலக்கிவிட்டு நீரில் வாயைக் கொப்பளித்து விட வேண்டும். இந்த கரியை தொடர்ந்து பயன்படுத்தி வரும் பொழுது நான்கு வாரங்களுக்குள் பற்களில் உள்ள மஞ்சள் கறை நீங்கி பல் வெள்ளையாகும் என ஒரு ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

நீர்ச்சத்து நிறைந்த பழங்கள்

அதிக அளவு நீர்ச்சத்து நிறைந்த பழங்களை சாப்பிடும் போது ஈறுகளில் ஏற்படக்கூடிய இரத்தக்கசிவுக்களை நீக்குவதற்கு வழி வகுக்கிறது. மேலும் பற்களில் உள்ள பாக்டீரியாக்களை நீக்குவதற்கும் இந்தப் பழங்கள் மிகவும் உதவுகிறது. நீர்ச்சத்து கொண்ட பழங்கள் உண்ணும் பொழுது பற்களின் இடையில் தேங்கி இருக்கக்கூடிய உணவுத் துகள்களை நீக்குவதற்கும் இது உதவுகிறது.இவ்வாறு பற்களை நாமே நமது வீட்டிலுள்ள பொருட்களை வைத்து இயற்கையான முறையில் சுத்தப்படுத்த முடியும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

MK Stalin - TN Rain
06.11.2024 Power Cut Details
VCK Leader Thirumavalavan - Tamilnadu CM MK Stalin
yellow alert rain
VCK Leader Thirumavalavan - TVK Leader Vijay
Sunil Gavaskar
Bengaluru