கருப்பை குறைபாடுகள் நீக்கும் சில இயற்கை வழிமுறை அறியலாம் வாருங்கள்…!
பெண்களுக்கு கருப்பை என்பது வாழ்நாளில் மிக முக்கியமான ஒரு உள் உறுப்பு. ஒற்றைக்கண் இல்லாமல் கூட வாழ்ந்து விடலாம். ஆனால் பெண்கள் கருப்பை இல்லாமல் இருப்பதால் மிகப் பெரும் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். கருப்பை இல்லாத பெண்கள் எவ்வளவு பிரச்சனைகளை சந்திப்பார்களோ அதற்கு சமமாக கருப்பை கோளாறுகள் இருந்தாலும் உடல் ஆரோக்கியமாக இருக்காது. இன்று கருப்பை சம்பந்தப்பட்ட சில குறைபாடுகளை போக்குவதற்கான இயற்கை வழி முறைகளை அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
கருப்பை குறைபாடுகள் நீங்க
- ஆடுதீண்டாப்பாளையுடன் மிளகு சேர்த்து அரைத்து தினமும் மூன்று வேலையும் பருகி வர கருப்பையில் உள்ள கிருமிகள் நீங்கும்.
- ஆலமரத்து பட்டைகளை நன்றாக காய வைத்து, இடித்து அந்த பொடியை பாலில் கலந்து குடித்து வர கருப்பைக் கோளாறுகள் குணமாகும்.
- பருத்தி இலை சாறுடன், தேன் கலந்து குடித்து வர கருப்பைக் கோளாறுகள் குணமாகும்.
- அரச இலை கொழுந்தை அரைத்து மோருடன் கலந்து குடித்து வரும் போது கருப்பையில் உள்ள கிருமிகள் நீங்கி, சுத்தமாகும்.
- வேப்பம் பூவுடன் மிளகு சேர்த்து பாலுடன் கலந்து குடித்து வர கருப்பைக் கோளாறுகள் குணமாகும்.
- மாதுளை வேர்ப்பட்டை மற்றும் மாதுளை விதைகளை எடுத்து பொடியாக்கி தினமும் மூன்று கிராம் வீதம் மூன்று வேலையும் குடித்து வர கருப்பைக் கோளாறுகள் குணமாகும்.
- பெருங்காயம் மற்றும் பனை வெல்லம் ஆகிய இரண்டையும் சேர்த்து பொடியாக்கி தினமும் சாப்பிட்டு வந்தால் கருப்பையில் உள்ள புண் குணமாகும்.