சோயாவில் சுவையான பக்கோடா செய்வது எப்படி என அறியலாம் வாருங்கள்…!
மாலை நேரத்தில் டீ, காபி குடிக்கும் பொழுது ஏதாவது மொறுமொறுப்பாக, சூடாக சாப்பிடுவது எல்லோருக்குமே பிடிக்கும். இதற்காக நாம் கடையில் சென்று பணம் கொடுத்து வாங்கி சாப்பிடுவது திருப்தியளிக்காது. ஆனால் வீட்டிலேயே ஏதாவது செய்து சாப்பிட்டால் அனைவருக்கும் போதுமான அளவு சாப்பிட கூடிய அளவிற்கு நாம் தயார் செய்யலாம். இன்று நாம் சோயாவை வைத்து எப்படி அட்டகாசமான பக்கோடா செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்க ள்.
தேவையான பொருட்கள்
- சோயா
- கோஸ்
- வெங்காயம்
- இஞ்சி பூண்டு விழுது
- பச்சை மிளகாய்
- மிளகாய் தூள்
- கறிவேப்பில்லை
- கொத்தமல்லி
- உப்பு
- எண்ணெய்
- கடலை மாவு
செய்முறை
அவித்தல் : முதலில் சோயா உருண்டைகளை வெந்நீரில் சேர்த்து, இதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து ஒரு 15 நிமிடம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும். பின் இதனை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.
கலவை : ஒரு பாத்திரத்தில் அரைத்த சோயா உருண்டைகளை சேர்த்து இதனுடன் வெங்காயம், துருவிய கோஸ், இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய், மிளகாய் தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி, தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு கடலைமாவு சேர்த்து நன்றாக தண்ணீர்விட்டு பிசைந்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பொரித்தல் : ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி, எண்ணெய் நன்கு கொதித்ததும், சிறு சிறு உருண்டைகளாக எடுத்து பொன்னிறமாக பொரித்து எடுத்துக்கொள்ளவும். அவ்வளவுதான் அட்டகாசமான ஆரோக்கியமான மாலை நேர ஸ்நாக்ஸ் தயார்.