நிம்மதியான உறக்கத்திற்கு பயன்படும் தக்காளியின் நன்மைகள் குறித்து அறியலாம் வாருங்கள்!

Default Image

சமையலுக்கு பயன்படுத்த கூடிய பொருட்களில் ஒன்றாக கருதப் படக் கூடிய பழ  வகைகளில் ஒன்றான தக்காளி பல்வேறு மருத்துவ நன்மைகளை தனக்குள் அடக்கி வைத்திருக்கிறது, அவைகள் குறித்து என்று அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.

தக்காளியின் நன்மைகள்

தக்காளிப் பழத்தில் அதிகபட்சமாக வைட்டமின் சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், பொட்டாசியம், வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டின், ஃபோலிக் அமிலம் ஆகியவை காணப்படுகிறது. இதன் காரணமாக உடலுக்கு அதிக அளவில் நோய் எதிர்ப்பு சக்தியை தர தக்காளி மிகவும் உகந்தது. இந்த தக்காளியில் உள்ள அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின் சி காரணமாக மார்பக புற்று நோய் மற்றும் புற்றுநோய் செல்கள் வளராமல் பாதுகாக்கும். சிகரெட் மற்றும் புகைப் பழக்கத்தினால் பாதிக்கப்பட்ட உடல் உள்ளுறுப்புகளை தக்காளிப்பழம் ஓரளவு குணப்படுத்துவதுடன், நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுக்கவும் உதவுகிறது. இதயம் சீராக இயங்குவதற்கும் ரத்த நாளங்களில் ஏற்படக்கூடிய அடைப்புகளை தடுக்கவும் உதவுகிறது. மேலும் தக்காளியில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் காரணமாக இளம் வயதில் ஏற்படக்கூடிய முதுமை தோற்றம் மற்றும் சூரிய ஒளியால் ஏற்படக்கூடிய மாற்றங்களை சரிசெய்து சருமத்தில் பளபளப்பைக் கொடுக்கிறது.

மேலும் அதிகப்படியான நார்ச்சத்து மற்றும் இன்சுலின் அளவை இந்த தக்காளி கொண்டுள்ளதால், கொழுப்பின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது. தக்காளியில் உள்ள ஃபோலிக் அமிலம் காரணமாக மன அழுத்தம், எரிச்சல் நீக்க உதவுவதுடன் சீரான உறக்கத்தையும் கொடுக்கிறது. தக்காளியில் உள்ள வைட்டமின் ஏ காரணமாக கண் பார்வை தெளிவடையவும், கண் சம்பந்தப்பட்ட கோளாறுகள் வராமலும் தடுக்கிறது. செரிமானத்தை சீராக்கி செரிமான மண்டலத்தை பாதுகாக்க உதவுவதுடன் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகிறது. இதை தொடர்ந்து உணவில் எடுத்துக் கொள்ளும் பொழுது நீர்ச்சத்து, சிறுநீரகம் மற்றும் சிறுநீர் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் நீங்கி விடுகிறது. இதில் உள்ள மெக்னீசியம் காரணமாக எலும்புகளின் தன்மையை வலுப்படுத்துவதுடன் தைராய்டு சுரப்பி நீங்கவும் உதவுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்