உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் 7 நன்மைகள் குறித்து அறியலாம் வாருங்கள்…!

Default Image

உடற்பயிற்சி செய்வது என்பது ஆண்கள், பெண்கள், சிறியவர்கள் முதியவர்கள் என அனைவருக்கும் பொதுவான ஒன்று தான். எந்த வயதில் உள்ள நபர்களாக இருந்தாலும் உடற்பயிற்சி என்பது அனைவருக்கும் பொதுவானது தான். இந்த உடற்பயிற்சியை வழக்கமாக செய்வதன் மூலம் நமது உடல் ஆரோக்கியமுடன் இருக்கிறது. மேலும், நம்மை இன்னும் அதிக ஆற்றலுடைய நபராக மாற்றுகிறது. நமது வாழ்வை மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் மாற்ற இந்த உடற்பயிற்சி மிகவும் உதவுகிறது. உடற்பயிற்சியின் மூலமாக நமக்கு கிடைக்கும் சில பயன்கள் குறித்து இன்று நாம் தெரிந்து கொள்ளலாம்.

உடல் எடை

தொடர்ச்சியாக நாம் உடற்பயிற்சி செய்வதன் மூலம் நமது உடல் எடையை அதிகரிக்க செய்யவும் முடியும், உடல் எடையை குறைக்கவும் முடியும். நாம் உடற்பயிற்சியை தொடர்ந்து செய்யும் பொழுது நமது உடலில் காணப்படக்கூடிய தேவையற்ற கொழுப்புகள் கரைகிறது. அதிக நேரம் உடற்பயிற்சி செய்தால் தான் நமது உடல் எடை குறையும் என்று நினைத்துக்கொள்ள வேண்டாம்.

நமக்கு குறைந்த அளவு நேரம் கிடைத்தாலும் நாம் தினமும் உடற்பயிற்சி செய்வது நமது உடலை ஆரோக்கியமுடன் விரும்பிய வடிவத்தில் மாற்ற உதவும். குறிப்பாக நமக்கு உடற்பயிற்சி எப்படி செய்வது என தெரியாவிட்டாலும் லிப்டில் செல்வதற்கு பதிலாக படிக்கட்டுகளில் நடந்து செல்வதே உடற்பயிற்சி தான்.

நோய் எதிர்ப்பு சக்தி

உடற்பயிற்சி செய்வது நோய்களை எதிர்த்துப் போராட உதவுவதுடன் உடலுக்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது. உடலில் காணப்படக்கூடிய உயர் இரத்த அழுத்தம், இதயநோய் ஆகியவற்றை இது சரி செய்கிறது. இதற்கு காரணமான ட்ரைகிளிசரைடுகளை நீக்கி, உடலின் ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. உடற்பயிற்சி செய்வதன் மூலமாக இதய ஆபத்துகள் நீங்கி ,நீரிழிவு வராமல் பாதுகாக்கிறது. மேலும் புற்று நோய், கீல்வாதம் ஆகிய நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது.

மனநிலை

உடற்பயிற்சி செய்வதன் மூலம் மன அழுத்தம் நீங்குவதற்கு பெரிதும் உதவுகிறது. ஜிம்மில் உடற்பயிற்சி செய்தாலும், நாம் வேகமாக நடந்தாலும் நமது மனதில் உள்ள கவலைகள் நீங்குவதற்கும், மனதை மகிழ்ச்சியாக நிதானமாக வைத்திருப்பதற்கும் இது உதவுகிறது. நாம் வழக்கமாக உடற்பயிற்சி செய்து வரும் பொழுது நமது மனநிலையில் ஏற்படக்கூடிய மாற்றங்களை நன்றாக உணரலாம். மேலும் நம் மீது நமக்கே ஒரு நம்பிக்கையும், சுயமரியாதையும் அதிகரிக்கவும் இது உதவும்.

ஆற்றல்

தொடர்ச்சியாக நாம் உடற்பயிற்சி செய்து வரும் பொழுது நமது தசை வலிமை அதிகரிப்பதுடன் மட்டுமல்லாமல், மன வலிமை அதிகரித்து நமக்கு சகிப்பு தன்மையும் அதிகம் உண்டாகுமாம். குறிப்பாக உடற்பயிற்சி மூலமாக நமது உடலில் ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகரிப்பதால் நமது இதயம் மிகத் திறமையாக செயல்பட்டு, நுரையீரலின் ஆரோக்கியம் மேம்பட்டு தினசரி அதிக அளவு வேலை இருந்தாலும் அவற்றை செய்ய கூடிய ஆற்றல் நமக்கு கிடைக்கிறதாம்.

தூக்கம்

ஒரு சராசரி மனிதனுக்கு மிக முக்கியமான ஒன்று தூக்கம். பலர் தூக்கமின்மையால் அவதிப்படுவார்கள். ஆனால் தூக்கம் ஒழுங்காக வர வேண்டும் என்றால், மருத்துவரை நாடுவதற்கு பதிலாக நாம் சிறந்த வழியாக உடற்பயிற்சியை கையாளலாம். வழக்கமாக நாம் உடற்பயிற்சி செய்யும்பொழுது படுக்கைக்கு சென்ற உடன் தூங்குவதற்கு இது உதவுவதுடன், ஆழ்ந்த நிம்மதியான உறக்கத்துக்கும் வழிவகுக்கிறது. மேலும் உடற்பயிற்சி செய்யும்போது படுக்கைக்கு அருகில் இருந்து உடற்பயிற்சி செய்யக்கூடாது.

பாலியல் வாழ்க்கை

நாம் உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலமாக சோர்ந்த நமது பாலியல் வாழ்க்கையில் மீண்டும் ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும் எனக் கூறப்படுகின்றது. அதாவது நாம் வழக்கமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு விட்டு, பாலியல் வாழ்வில் நுழையும் பொழுது நமது உடல் ஆற்றல் அதிகரிக்க உதவுகிறது. மேலும் உடற்பயிற்சி செய்யும் பெண்களுக்கு இது அதிக ஆற்றல் பெறவும் உதவுகிறது. குறிப்பாக உடற்பயிற்சி செய்யாத ஆண்களை விட வழக்கமாக உடற்பயிற்சி செய்யும் ஆண்களுக்கு விறைப்புத்தன்மை குறைபாடு ஏற்படாது எனவும் கூறப்படுகிறது.

குடும்ப பிணைப்பு

உடற்பயிற்சி செய்வதன் மூலமாக தனிமையாக இருக்க விரும்புபவர்கள் கூட குடும்பமாக ஒன்றாக இருந்து வாழ வேண்டும் என விரும்புவார்களாம். சமூகத்தை நேசிக்கக் கூடிய ஒரு மனப்பான்மை உண்டாகும். நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் அதிக நேரம் செலவழிக்க  உடற்பயிற்சி வழிவகுக்குமாம். உடற்பயிற்சி மட்டுமல்லாமல் நீச்சல்,கால்பந்து விளையாட்டு போன்ற சில விளையாட்டுகளில் ஈடுபட்டாலும் கூட இது போன்ற மனநிலை உருவாகும் என கூறப்படுகிறது.

இவ்வாறு உடற்பயிற்சி நமது வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்றாக காணப்படுகிறது. உடற்பயிற்சிகளைத் தவிர்க்கும் மனிதர்களை விட அதிக அளவில் உடற்பயிற்சி செய்யக் கூடிய மனிதர்களுக்கு நோய் எதிர்ப்பு தன்மை, தூக்கம், அதிக அளவு ஆற்றல், மனநிலையில் மாற்றம் என பல நன்மைகள் கிடைக்கிறது.

உடற்பயிற்சி என்றால் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்தால் தான் உடற்பயிற்சி என்று கிடையாது. நடைபயிற்சி, ஓடுதல், நீச்சல் பயிற்சி என அனைத்துமே உடற்பயிற்சி போல தான். மேலும் குறைந்த பட்சமாக ஒரு வாரத்துக்கு 75 நிமிடங்கள் நாம் உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்லது என கூறப்படுகிறது. உடற்பயிற்சி மூலமாக நமது உடலில் பல நோய்கள் நீங்குவதற்கு உதவுகிறது. கவலைகள் நீங்க உதவுவதுடன் இதய நோய், நீரிழிவு நோய் மற்றும் மூட்டு வலி போன்ற நீண்டகால உடல்நல பிரச்சனைகளையும் இந்த உடற்பயிற்சி சரி செய்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்