ஆண்களுக்கு ஏற்படும் தலைமுடி உதிர்வுக்கு இயற்கை தீர்வு அறியலாம் வாருங்கள்!

Default Image

தற்போதைய காலத்தில் எல்லாம் ஆண்களுக்கு சீக்கிரமாகவே வழுக்கை விழுந்து விடுகிறது. இதற்கு காரணம் ஒவ்வொரு இடங்களில் உள்ளவர்கள் தங்களது ஊரின் தண்ணீர் என்று சொல்வார்கள், பலர் தங்களது பாரம்பரிய மரபுகளினால் வருகிறது என்று சொல்லுவார்கள். ஆனால் ஆரம்பத்தில் இருந்தே சரியான பராமரிப்பு கொடுக்காமல் தலை முடி ஆரோக்கியத்தை இழப்பதுதான் முடி உதிரத் தொடங்க காரணமாகிறது. எவ்வாறு ஆண்கள் தலை முடியை இயற்கையாக பாதுகாக்கலாம் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.

ஆண்கள் தங்கள் தலை முடியை பாதுகாக்க சில வழிகள்

தலைமுடி ஆரோக்கியமாக இருக்க முதல் நாம் செய்ய வேண்டியது தரமற்ற ஹேர் ஸ்டைலிங் பொருட்களை வாங்கி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இதனால் தான் முடி கொட்டுவது அதிகரிக்கிறது. மேலும் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை தவறாமல் எண்ணெய் தேய்த்துக் குளித்து வர தலைமுடி வறட்சி அடையாமலும், வலிமையுடனும் இருக்கும். அது போல அடிக்கடி ஆண்கள் பையில் சீப்பு வைத்துக் கொண்டு தலைவாரிக் கொண்டே இருப்பதாலும் முடி கொட்டுவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளது. அதிகம் சீப்பு பயன்படுத்துவதால் முடி தனது வலுவை இழக்கும் வாய்ப்பு உண்டாகிறது, எனவே கைகளாலே அடிக்கடி முடிகளை கோதிக் கொள்ளலாம்.

எப்போதாவது சீப்பை பயன்படுத்தலாம், மேலும் தலை முடிக்கு கண்டிஷனர் பயன்படுத்துவது மிகவும் நல்லது. ஷாம்பு இல்லாதவர்கள் சோப்புகளை பயன்படுத்துவதால், தலைமுடியில் உள்ள எண்ணெய் தன்மை முழுவதுமாக நீக்கப்பட்டு மென்மையிழந்து வறட்சியுடன் காணப்படுவதுடன் பொலிவிழந்து முடி உதிர்வதற்கு காரணம் ஆகிறது. எனவே ஷாம்பு மற்றும் கண்டிஷனரை பயன்படுத்த வேண்டும். அதிகமாக புகை பிடிப்பவர்களுக்கும் முடி உதிர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் ஏற்படுகிறது. மேலும் அதிகமான சூடுள்ள தண்ணீரில் தலையை அலசும்போது முடி சீக்கிரம் வலுவிழந்து உதிர்ந்து விடுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்