ஆரோக்கியத்தின் அழகி ஆரஞ்சு பழத்தின் நன்மைகள் அறியலாம் வாருங்கள்!
ஆரோக்கியத்தின் அழகி என அழைக்கப்படக்கூடிய ஆரஞ்சு படத்தில் ஏகப்பட்ட நன்மைகள் உள்ளது. இந்த நன்மைகள் குறித்து நாம் என்று பார்க்கலாம் வாருங்கள்.
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி, கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டின் சத்துக்கள் அடங்கியுள்ளது. இந்த ஆரஞ்சு பழத்தில் கலோரிகள் மிகக் குறைவாகக் காணப்படுவதால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் தங்களது டயட்டில் இந்த ஆரஞ்சு பழத்தை சேர்த்துக் கொள்ளலாம். இது மட்டுமல்லாமல் இந்த பழத்தில் உள்ள அதிக அளவு ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் காரணமாக உடலில் உள்ள பிரீரேடிக்கல் செல்களை அழிக்க உதவுகிறது. இந்த செல்கள் புற்றுநோய் உருவாவதற்கு காரணமாக அமைகிறது, அவற்றை அழிக்க ஆரஞ்சு பழம் உதவுகிறது.
இப்பழத்தில் உள்ள வைட்டமின் சி காரணமாக உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அள்ளித்தருகிறது. மேலும் எலும்பு மண்டலங்களையும் வலுப்படுத்துகிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க ஆரஞ்சு பழம் மிகவும் உதவுகிறது. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து ரத்த கொதிப்பு இருதய கோளாறு போன்ற நோய்கள் வராமல் பாதுகாக்க இந்த பழத்தின் பங்கு மிகவும் முக்கியமானது. அதிக அளவு நார்ச்சத்து கொண்டுள்ளதால் இது மலமிளக்கியாகவும் பயன்படுகிறது. மேலும் இதில் உள்ள வைட்டமின் சி அண்டிஆக்சிடன்ட்ஸ் காரணமாக இளமையான தோற்றத்தை தருகிறது. மேலும் ரத்த அழுத்தத்தை குறைத்து முடி கொட்டுதலை தவிர்த்து உடல் வெப்பத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.