ஆப்பிளில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் அறியலாம் வாருங்கள்!
ஆப்பிள் பழம் சாப்பிடுவதற்கு எப்படி சுவையாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு அதில் ஆரோக்கியமான மருத்துவ நன்மைகளும் உள்ளது. அவற்றை பற்றி பார்க்கலாம் வாருங்கள்.
ஆப்பிளின் நன்மைகள்
ஆப்பிள் பலத்தை நாம் வரம் ஒரு முறையாவது நிச்சயம் சாப்பிட வேண்டும். ஏனென்றால், இந்த பழத்தில் அதிகப்படியான வைட்டமின்கள், இரும்பு புரோட்டீன்,கொழுப்பு, பாஸ்பேட், சர்க்கரை, பொட்டாசியம்,சோடியம், பெக்டின், மேலிக் யூரிக் அமிலங்கள், உயிர்ச் சத்துக்கள் பி1, பி2 ஆகியவை உள்ளது. இதில் குவர்செடின் எனும் அமிலம் இருப்பதால் இதயம் சம்மந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கிறது.
புற்றுநோய் உள்ளவர்கள் ஆப்பிளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், விரைவில் குணமடையலாம். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்க உதவுவதுடன், மூளை வளர்ச்சியையும் அதிகரிக்க செய்கிறது. இந்த பலம் நரம்பு மண்டலத்தை தூண்டி, நரம்பு சார்ந்த கோளாறுகள் வராமல் தடுக்கிறது. செரிமான கோளாறுகளை சரியாக்குவதுடன், உடலில் மற்றும் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும் குறைக்கிறது.