மிளகின் மிகச்சிறந்த நன்மைகள் அறியலாம் வாருங்கள்!
உணவின் சுவை தரத்தை உயர்த்துவதற்காகவும் உடல் நலத்திற்காகவும் உணவுகளுடன் சேர்க்கப்படும் கூடிய மிளகு குறித்து நாம் அறியாத மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள் பற்றி அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
மிகச்சிறந்த நோய் எதிர்ப்பு தூண்டியாகிய மிளகில் தாது சார்ந்த நோய் எதிர்ப்பு பொருட்கள் அதிக அளவில் உள்ளது. மேலும் இந்த மிளகை தினமும் தண்ணீருடன் மாத்திரை போல இரண்டு குடித்து வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன் சளி காய்ச்சலுக்கு காரணமான கிருமிகள் உடலில் ஏற்படாமல் தடுக்கிறது. தொண்டையில் வீக்கம் ஏற்பட்டு இருந்தால் இந்த மிளகை பயன்படுத்தி சரி செய்யலாம். மேலும் ஆஸ்துமா நோயால் அவதிப்படுபவர்கள் தினமும் 5 மிளகை மென்று சாப்பிடுவது நல்லது. பனங்கற்கண்டு சேர்த்து மிளகுத்தூளை சாப்பிட்டு வந்தால் இருமல் நிற்கும், மேலும் ஒரு டீஸ்பூன் நெய், 4 பூண்டு ஆகியவற்றுடன் மிளகை சேர்த்து லேசாக பொரித்து ஆறுவதற்குள் சாப்பிட சளி இருமல் இயற்கை வழியில் நீங்குவதுடன் உடல் ஆரோக்கியமாக இருக்கும். பாலில் மிளகு சேர்த்து உட்கொண்டால், நாள்பட்ட ஆஸ்துமா நோயை சரிசெய்ய உதவும்.
சிகரெட், பீடி, புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு அடிமையாக இருப்பவர்கள் வாயில் இந்த மிளகை போட்டு அடிக்கடி மென்று வரும் பொழுது அப்பழக்கத்தில் இருந்து விடுபடலாம். மேலும் ஆண்களுக்கு ஏற்படக் கூடிய மலட்டுத் தன்மையைப் போக்குவதற்கும் இந்த மிளகு மிகவும் உதவுகிறது, வாயுக்கோளாறுகள் நீங்கும், மாமிச உணவுகள் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் ஏற்படக்கூடிய புற்றுநோய் உயிருக்கே ஆபத்தாக மாறிவிடும். இத்தகைய சமயங்களில் மிளகையும் அதிக அளவில் மாமிச உணவுகளுடன் சேர்த்து உட்கொள்ளும் பொழுது இந்த புற்றுநோய் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. பற்கள் வலுவாக இருக்க உதவுவதுடன் கொழுப்பு நிறைந்த உணவுகளால் ஏற்படக்கூடிய பொடுகு தொந்தரவு நீங்கவும் உதவுகிறது. ரத்த அழுத்தத்தை சரிசெய்து சீரான நிலையில் ரத்த ஓட்டம் நடைபெற உதவுகிறது.