பேறுகாலத்தில் பெரிதும் உதவும் பேரீச்சையின் நன்மைகள் அறியலாம் வாருங்கள்!

Default Image

கர்ப்பிணிகள் பேரிச்சம்பழம் ஆரம்ப காலகட்டத்தில் சாப்பிடக்கூடாது என்று சொல்லி தான் கேள்விப் பட்டிருப்போம் ஆனால் குறிப்பிட்ட மாதங்களுக்கு பின்பு கர்ப்பிணிகள் பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் எக்கச்சக்கமான நன்மைகள் உள்ளது. அவைகள் குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.

பேறுகாலத்தில் பேரிச்சையின் நன்மைகள்

பேரிச்சம் பழத்தில் அதிக அளவு மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் நிறைந்து காணப்படுவதால் கர்ப்ப காலத்தில் பேரிச்சம் பழம் சாப்பிடுவது தாய்க்கு மட்டுமின்றி கருவில் வளரும் குழந்தைக்கும் மிகவும் நல்லது. இதில் கொழுப்பு மிகவும் குறைவு என்பதால் கர்ப்பிணிகள் இதை சாப்பிடுவதற்கு தயங்க தேவை இல்லை. ஆரம்ப காலகட்டத்தில் அதிகப்படியான இனிப்பு சாப்பிடுவது கரு வளர்ச்சிக்கு ஆபத்து என்பதால் தான் பேரிச்சம் பழங்கள் சாப்பிடுவது தவிர்க்க வேண்டும் என கூறப்படுகிறது. ஆனால் ஐந்து மாதம் ஆறு மாதங்களுக்குப் பின்பதாக இந்த பேரிச்சம் பழத்தை எடுத்துக் கொள்ளும் பொழுது உடலில் நீர்ச்சத்தை சீரான அளவில் வைத்துக் கொள்ள உதவுவதுடதான் இதயம், செரிமான மண்டலம் மற்றும் தசைகளின் இயக்கத்தையும் சீராக வைத்திருக்க உதவுகிறது.

மேலும் செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் தடுப்பதுடன், கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய மலச்சிக்கலைத் தடுக்கும் உதவுகிறது. கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த உதவுவதுடன், உடல் எடையையும் சீராக பராமரிக்க உதவுகிறது. இந்த பேரிச்சம் பழத்தில் உள்ள ஃபோலட் காரணமாக புதிய செல்களின் உருவாக்கத்திற்கு உதவுவதுடன், இரத்த சோகையை ஏற்படாமல் தடுப்பதற்கும், குழந்தையின் பிறப்பு குறைபாடு மற்றும் மூளை பாதிப்புகளை தடுப்பதற்கும் உதவுகிறது. கர்ப்ப காலத்தில் வைட்டமின் கே மிக அவசியமான ஒன்று.

அது இந்த பேரிச்சம் பழத்தில் அதிக அளவில் காணப்படுகிறது. இதன் மூலம் ரத்தம் உறைவது தடுக்கப்படும். குழந்தையின் எலும்பு மண்டலம் நன்கு வளர்ச்சி அடையவும் உதவுகிறது. தேவையான அளவு குழந்தைக்கு புரோட்டீனை இந்த பேரிச்சம்பழம் வழங்குவதுடன், குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். மேலும் குழந்தை பெற்றதற்கு பின்பதாக உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள கர்ப்ப காலத்திலேயே உட்கொள்ளக் கூடிய பேரிச்சம் பழம் உதவுகிறது. மேலும் பிரசவ நேரத்திலும் இந்த பேரிச்சம் பழம் சாப்பிடுவதன் காரணமாக ஆரோக்கியமான பிரசவம் உண்டாகும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்