ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படக்கூடிய ஆப்பிள் வகையைச் சேர்ந்த பேரிக்காய் அதிக அளவு சத்து கொண்டது. இதில் புரதம், மாவுப்பொருள், கால்சியம் பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு சத்து, நார்ப்பொருட்கள், மெக்னீஷியம், சோடியம், தாமிரம், கந்தகம், குளோரின் ஆகிய பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளது. இந்த பேரிக்காயில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி மேலும் அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
நார்ச் சத்து அதிகம் நிறைந்து உள்ளதால் இந்த பேரிக்காய் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகளை குறைப்பதுடன், இதில் உள்ள பிளவனாய்ட்ஸ் மற்றும் ரசாயனங்கள் காரணமாக இன்சுலின் அளவை உடலில் மேம்படுத்துகிறது. மேலும் மலச்சிக்கல் வராமலும், குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படாமலும் பாதுகாக்கிறது. இந்த பேரிக்காயில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ் காரணமாக எலும்பு வளர்ச்சிக்கு இது மிகவும் உதவுகிறது. மேலும் வாரம் இருமுறை இந்த பேரிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது ரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்பு குறைந்து ரத்த ஓட்டம் சீராக மாறுவதுடன் சுத்திகரிக்கப்பட்ட ரத்தம் உடலில் அதிகம் இருக்கும்.
மேலும் அஜீரண கோளாறுகளை போக்குவதில் பேரிக்காய் மிகவும் அதிக ஆற்றல் கொண்டது. குடல் புற்றுநோயை வராமல் தடுப்பதுடன் பேரிக்காய் சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டு வரும் பொழுது மன இறுக்கம் மற்றும் சோர்வு நீங்கி உடல் புத்துணர்ச்சியுடன் காணப்படும். வைட்டமின்கள் மற்றும் புரதசத்து காரணமாக உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய தன்மையை இது கொண்டுள்ளது. கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக்க, பற்களுக்கு உறுதியை அளிக்க, மாதவிடாய் நேரத்தில் பெண்களுக்கும் சீரான உடல் நிலையை கொடுக்க இது உதவுகிறது. நரம்புத்தளர்ச்சி உள்ளவர்கள் இந்த பேரிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.
சென்னை : நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற பாடல்களை தங்களுடைய திருமண வீடியோவில் பயன்படுத்த தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை என்பதாக கூறி…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 16) முதல் வரும் நவம்பர் 21 வரையில் 6 நாள்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று முதல்…
திருவாரூர் : வருகின்ற நவம்பர் 30-ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. திருவாரூரில் உள்ள தமிழ்நாடு…
சென்னை : பிரபல லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் தொடர்புடைய பல்வேறு இடங்களில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி முதல் அமலாக்கத்துறையினர் …
சென்னை : நயன்தார விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வரும் நவம்பர் 20-ஆம் தேதி வெளியாகவுள்ளது.…