ஆயிரம் நன்மைகள் கொண்ட ஆரஞ்சு பழத்தில் நன்மைகள் அறியலாம் வாருங்கள்!

Default Image

இயற்கையில் கொடுக்கப்பட்டுள்ள எல்லா பழங்களுமே நமக்கு வரமாக தான் அமைந்துள்ளது. அதிலும் ஆரஞ்சு பழத்தில் எக்கச்சக்கமான நன்மைகள் உள்ளன. அதில் என்னென்ன பயன்கள் உள்ளது, மருத்துவ குணம் உள்ளது என்பது பற்றி அறியலாம் வாருங்கள்.

ஆரஞ்சு பழத்தின் நன்மைகள்

தொடர்ச்சியாக சாப்பிட்டு வருவதால் ஆரஞ்சு பழத்தின் மூலம் ஆண்களுக்கு விந்தணுக்கள் புதிதாகவும் ஆரோக்கியமாகவும் உருவாக வழிவகை செய்கிறது. இந்த பழத்தில் உள்ள ஊட்டச்சத்து விந்தணுக்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுவதாக பல்வேறு மருத்துவ ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், மலட்டுத்தன்மையை நீக்கி ஆரோக்கியமாக குழந்தை பிறக்கவும் இது வழிவகை செய்கிறது. மேலும் இதயநோய் உள்ளவர்கள் பழங்கள் காய்கறிகளை அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைப்பது வழக்கம். அதிலும் ஆரஞ்சு பழங்களில் பொட்டாசியம் சத்து அதிகம் இருப்பதால் இதை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு இதயத்திற்கு இரத்தத்தை கொண்டு செல்லும் நரம்புகள் இறுக்கம் ஏற்படுவதைத் தடுத்து, மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போகிறது.

வாய் துர்நாற்றம் மற்றும் ஈறுகள், பற்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கும் பல் சொத்தை நீங்கி பல் கூச்சம் மறைவதற்கும் ஆரஞ்சு பழ சாறு பிழிந்து தினமும் காலை மற்றும் மதிய வேளையில் அருந்தி வருவது மிகவும் நல்லது. பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் சி மற்றும் ஏ சத்துக்கள் அதிகமிருப்பதால் ஆரஞ்சு பழத்தில் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் காணப்படுவதால்,கண் பார்வையை அதிகரிக்க உதவுகிறது. வைட்டமின் ஏ சத்து இதில் அதிகம் நிறைந்திருப்பதால் மாலைக்கண் நோய் கண்பார்வை மங்குதல் ஆகியவற்றை நீக்கி கண்ணை தெளிவாக வைத்திருக்க உதவுகிறது.

எலும்புகள் நன்கு வளர்ச்சியடைய அந்த ஆரஞ்சு பழத்தில் உள்ள பொட்டாசியம் மற்றும் கால்சியம் உதவுவதுடன் ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்பு சார்ந்த நோய் ஏற்படாமல் தடுக்கிறது. ரத்த அழுத்தத்தை குறைத்து சீராக வைத்திருக்க உதவுகிறது, பக்கவாத நோய்கள் தடுக்கிறது. கால்சியம் அதிகம் இருப்பதால் சிறுநீரக கற்கள் மறைய உதவுகிறது, அதிக அளவில் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதுடன் உடல் கோடை காலங்களில் ஏற்படக்கூடிய உஷ்ணத்தால் வயிற்று வலி மற்றும் கட்டிகள் தோன்றுவதையும் தடுத்து, உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. இவ்வளவு பயன்களை கொண்ட இந்த ஆரஞ்சு பழம் இயற்கை நமக்கு கொடுத்துள்ள வரம். இந்த பழங்கள் கிடைக்கும் பொழுது நிச்சயம் வாங்கி உண்ணுங்கள் பயன்பெறுங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்