உங்கள் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 5 இரும்பு சத்துள்ள உணவுகள் அறியலாம் வாருங்கள்…!

Default Image

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி போதுமான அளவு இருந்தால் தான் ஆரோக்கியமாக நோய் இன்றி நம்மால் வாழ முடியும். நாம் இதற்காக செயற்கையான எதையும் நாட வேண்டிய அவசியம் இல்லை.

இயற்கையாக நாம் சாப்பிடக்கூடிய உணவுகளை சரியாக எடுத்துக் கொண்டால் நாம் நோயற்ற வாழ்வை வாழலாம். இன்று நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய ஐந்து இரும்பு சத்து நிறைந்த பொருட்கள் குறித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

எள்

நன்மைகள் : எள்ளில் இரும்பு, தாமிரம், துத்தநாகம் மற்றும் செலினியம் ஆகியவை அடங்கியுள்ளது. மேலும் இதில் வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் இ நிறைந்து காணப்படுவதுடன், இதில் ஃபோலட்களும் நிறைந்துள்ளது.

உபயோகிக்கும் முறை : ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை எடுத்து அதனை நன்றாக வறுத்து, அதனுடன் தேன் மற்றும் சிறிதளவு நெய் சேர்த்து லட்டு போல தயாரித்து கொள்ளவும். இந்த லட்டை தினமும் சாப்பிட்டு வரவும். இது நமது உடலில் இரும்பு சத்து அதிகரிக்க உதவியாக இருக்கும்.

பேரிட்சை மற்றும் உலர் திராட்சை

நன்மைகள் : இவற்றில் இரும்பு, மெக்னீஷியம், தாமிரம் மற்றும் வைட்டமின் ஏ, சி ஆகியவை நிறைந்து காணப்படுகிறது.

உபயோகிக்கும் முறை : தினமும் இரண்டு-மூன்று பேரிட்சை பழம் அல்லது ஒரு தேக்கரண்டி உலர் திராட்சையை சாப்பிட வேண்டும். இவ்வாறு தொடர்ச்சியாக சாப்பிடும்போது நமது உடலில் இரும்பு சத்து அளவு அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைக்கும்.

பீட்ரூட் மற்றும் கேரட்

நன்மைகள் : பீட்ரூட், கேரட் ஆகியவற்றில் இரும்பு சத்து அதிகம் நிறைந்து காணப்படுகிறது.

உபயோகிக்கும் முறை : ஒரு கப் பீட்ரூட் மற்றும் கேரட்டை நன்றாக  அரைத்து, அதன் சாறை வடிகட்டி சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து தினமும் காலையில் தவறாமல் குடித்து வர வேண்டும். இது நமது உடலில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ அதிகரிக்க உதவும்.

கோதுமை

நன்மைகள் : இதில் பீட்டா, கரோட்டின், வைட்டமின் கே, போலிக் அமிலம், கால்சியம், இரும்பு, நார்ச்சத்து, புரதம், வைட்டமின் சி ஆகியவை நிறைந்து காணப்படுகிறது.

உபயோகிக்கும் முறை : தினமும் காலையில் ஒரு ஸ்பூன் கோதுமையை எடுத்து சாதாரணமாக சாப்பிட வேண்டும் அல்லது கோதுமை புல்லை சாறு எடுத்து குடிக்க வேண்டும். இது நமது உடலில் ஹீமோகுளோபினை மேம்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

முருங்கை இலைகள்

நன்மைகள் : முருங்கை இலைகளில் இரும்பு, வைட்டமின் ஏ, சி மற்றும் மெக்னீசியம் ஆகியவை நிறைந்து காணப்படுகிறது.

உபயோகிக்கும் முறை : தினமும் காலையில் வெறும் வயிற்றில் 1 தேக்கரண்டி முருங்கை இலை தூள் அல்லது முருங்கை இலை சாறை குடித்து வந்தால் உங்கள் உடலில் இரும்பு சத்து அதிகரிக்க உதவும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்