நடிகர் சிம்பு தனது ட்வீட்டர் பக்கத்தில் எனது பிறந்தநாளன்று நான் உங்களோடுதான் இருக்க வேண்டும் ஆனால் சில முன் தீர்மானங்களால் ஊரில் இல்லை வெளியூர் செல்கிறேன் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நடிகர் சிம்பு தமிழ் திரையுலகில் நீண்ட நாட்களுக்கு பிறகு ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.இவர் நடிப்பில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான ஈஸ்வரன் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. சிம்புவிற்கு நல்ல கம்பேக் என்றே கூறலாம். இந்த நிலையில் இந்த திரைப்படங்களை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். அதற்கு , பத்து தல மற்றும் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஒரு புதிய திரைபடத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த நிலையில் தற்போது தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பது, “எத்தனை தடைகளை நாள் கடந்து வந்தாலும். என்னுடன் என்றுமே நின்றிருக்கிறது உங்கள் பேரன்பு அதுதான் நான் அடுத்தடுத்து படங்கள் தருவதற்கும், உடல் எடையைக் குறைத்து உத்வேகமானதற்கும் மிக முக்கிய காரணம். கொரோனா காலகட்டத்திற்காக வெகு விரைவாக முடிக்கப்பட்ட ஈஸ்வரன் படத்திற்கு பெரிய வரவேற்பைக் கொடுத்தீர்கள். வெற்றி பெறச் செய்தீர்கள் உங்களை நான் ரசிகர்கள் என்று சொல்வதை விட எனது குடும்பம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும் உங்கள் அன்பிற்கு நிறைய நன்றிக் கடன்பட்டுள்ளேன். எனது பிறந்தநாளன்று நான் உங்களோடுதான் இருக்க வேண்டும் ஆனால் சில முன் தீர்மானங்களால் ஊரில் இல்லை வெளியூர் செல்கிறேன் என் குடும்பத்தினர் வந்து வீட்டு முன் காத்திருப்பதை நான் விரும்பவில்லை அதனால் நண்பர்கள் யாரும் என் பிறந்தநாளன்று சந்திக்க வந்து ஏமாற்றமடைய வேண்டாம் உங்களை நேரடியாக சந்திக்கும் நிகழ்வை விரைவில் ஒருங்கிணைப்பேன். நாம் சந்திப்போம் ஒரு சிறு மகிழ்ச்சியாக என் பிறந்தநாளன்று “மாநாடு” டீசர் வெளியாகும். மகிழுங்கள். நிச்சயம் இனி நமது ஆண்டாக வெற்றிகரமான ஆண்டாக இருக்கும் அனைவருக்கும் அன்பும்… நன்றியும்.” என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக உருவாகவுள்ளது. அதன்படி, புயல்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறுகிறது. இந்த புயலுக்கு ஃபெங்கல்…
சென்னை :அம்மை நோய் வந்தால் வீட்டில் செய்ய வேண்டியதும் செய்யக்கூடாததையும் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்வோம். அம்மை…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் எனவும், இந்த…
சென்னை : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஐபிஎல் 2025 தொடரானது தொடங்கவுள்ளது. இந்த தொடர் மார்ச்-14 ம் தேதி…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக உருமாறும் என வானிலை…