அம்மை மற்றும் காயத்தழும்புகள் மறைய கசகசாவுடன் இதை சேர்த்து போட்டால் போதுமாம்!
உடலில் அம்மை மற்றும் கீழே விழுந்த காயத்தழும்புகள் அல்லது புண்கள் வந்து அதனால் ஏற்பட்ட தழும்புகள் மறைய நாம் செயற்கையான க்ரீம்களை வாங்கி உபயோகிப்பதை விட இயற்கையான மூலிகை முறையை உபயோகிக்கலாம். வாருங்கள் பாப்போம்.
தேவையானவை
- கசகசா
- மஞ்சள் துண்டு
- கறிவேப்பில்லை
உபயோகிக்கும் முறை
ஒரு பௌலில் சிறிதளவு கசகசா, சிறிய மஞ்சள் துண்டு மற்றும் கறிவேப்பில்லை ஆகிய மூன்றையும் சேர்த்து அவற்றை மை போல அரைத்துக்கொள்ளவும். அதன் பின்பு அதை தழும்புகள் உள்ள இடத்தில் பத்து போல போடவும்.
20 நிமிடம் வரை அப்படியே விட்டு விட்டு, பின்பு பயத்தம் மாவு இருந்தால் அதை பூசி கழுவுங்கள். விரைவில் தழும்புகள் மறைத்து அழகிய சருமம் கிடைக்கும்.