பார்ப்பவர் மனதை கொள்ளையடிக்கும் பின்லாந்து வானத்தில் தோன்றிய வண்ணமய கட்சி!

பார்ப்பவர் மனதை கொள்ளையடிக்கும் பின்லாந்து வானத்தில் தோன்றிய வண்ணமய கட்சி புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது.
உலகின் சில இடங்களில் அடிக்கடி ஏதாவது ஒரு அதிசயமான நிகழ்வுகள் ஏற்படுவது வழக்கம். ஆனால் ஒருமுறை ஏற்பட்ட நிகழ்வு அடிக்கடி ஏற்பட்டால் அது அதிசயம் கிடையாது. எப்போதாவது ஒருமுறை ஏற்படக்கூடிய சில நிகழ்வுகள் மக்களின் மனதை மிகவும் கொள்ளை அடித்துவிடும். அதில் ஒன்றாக நேற்று பின்லாந்து நாட்டில் ஆர்டிக் வட்டத்தில் வடக்கே உள்ள உட்ஸ்ஜோகி எனும் கிராமத்தில் நேற்று இரவு 10 மணியளவில் அற்புதமான காட்சி ஒன்று வானத்தில் உருவாகியுள்ளது. வானம் முழுவதிலும் உள்ள வெள்ளை மற்றும் ஊதா கோடுகளுடன் பெரிய பச்சை நிற மேகங்கள் போர்த்தப்பட்டது போன்ற காட்சிகள் தோன்றியுள்ளது.
அரோரா போரியல் என அழைக்கப்படக் கூடிய இந்த வடக்கு விளக்குகள் சூரியனின் வளிமண்டலத்தில் பூமியின் வாயுத்துகள்கள் வளிமண்டல பொருட்களுடன் மோதுவதால் ஏற்படக்கூடிய விளைவு என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மேலும் இந்த மோதல்களினால் தான் பூமியின் வடக்கு மற்றும் தென் துருவங்களில் உள்ள காந்த மண்டலங்களை வண்ணமயமான நீரோடைகளாக வானத்தில் காட்டுகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!
April 29, 2025
“அந்த பையனுக்கு பயம் இல்ல” கிரிக்கெட் உலகத்தை திரும்பி பார்க்க வைத்த வைபவ்.! மொட்டை மாடி பயிற்சி வீடியோ.!
April 29, 2025
வைரல் வீடியோ: பஹல்காம் தாக்குதலுக்கு ஜிப்லைன் ஆப்ரேட்டர் காரணமா? சுற்றுலா பயணி அளித்த ஆதாரம்.!
April 29, 2025
தீவிரவாத தாக்குதல்…, நடிகர் அஜித் கேட்டு கொண்டது இதைத்தான்!
April 29, 2025
குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!
April 28, 2025