கலர் ஆகணும் ஆனால் செலவாகக் கூடாது! செலவே இல்லாத சில இயற்கை டிப்ஸ் இதோ!

Default Image

தற்போதைய காலத்தில் ஆண்கள் பெண்கள் இருவருமே அழகாக வெண்மை நிறமாக இருக்க வேண்டும் என்று விரும்புவது வழக்கமாகிவிட்டது. இதற்காக பியூட்டி பார்லர் சென்று செயற்கையான கிரீம்களை பயன்படுத்தி அதனால் பக்க விளைவுகளை சந்தித்து உள்ளவர்கள் தான் அநேகர். ஆனால் வீட்டில் உள்ள இயற்கைப் பொருட்களை வைத்து எப்படி வெள்ளையாவது என்றும் அதனை நிலைத்திருக்க வைப்பது எப்படி எனவும் பார்க்கலாம் வாருங்கள்.

இயற்கை டிப்ஸ் சில இதோ

முதலில் கடலைமாவுடன் எலுமிச்சம்பழச்சாறு மற்றும் லேசாக 2 டீஸ்பூன் தக்காளி சாறு ஆகியவற்றை நன்றாக கலந்து முகத்தில் இரண்டு வாரத்திற்கு தொடர்ந்து தடவி வந்தால் பளபளப்பான முகம் பெறுவதுடன் முகத்தின் கருமையையும் கொஞ்சம் கொஞ்சமாக மறையத் துவங்கும். அதேபோல காப்பித் தூளுடன் தேன் கலந்து பூசி வரும்பொழுதும் நிச்சயம் வெண்மை முகத்தையும் இளமையான தோற்றம் கொண்ட முகத்தையும் பெறலாம். தேன் கலப்பதால் முகத்திலுள்ள முடி நரைத்து விடும் என்று அஞ்சத் தேவையில்லை. அப்படி நிச்சயம் நடக்காது, அவ்வளவு அச்சம் இருந்தால் காப்பித் தூளுடன் தேன் கலக்கும் பொழுது இரண்டு துளி எலுமிச்சம் சாறு விட்டுக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக அரிசி மாவு மற்றும் தயிர் ஆகிய இரண்டையும் எடுத்துக் கொண்டு நன்றாக கலந்து கொள்ளுங்கள். அரிசி மாவு லேசாக சொரசொரப்பு தன்மையுடன் இருக்குமாறு வைத்துக் கொண்டு முகத்தில் தடவி விட்டு 5 நிமிடம் கழித்து நன்றாக கைகளால் மேலும் கீழும் உரசியவாறு எடுத்து அதன்பின் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவி வர முகத்தில் உள்ள பருக்கள் மறைவதுடன் பளபளப்பான முகமும் கிடைக்கும். ஆரஞ்சு பழம் சாப்பிட்டுவிட்டு தூக்கி எறியக் கூடிய தோலியை இனி வீசாமல் இரவு நேரத்தில் ஊற வைத்துவிட்டு காலையில் எழுந்து அந்த நீரில் முகத்தைக் கழுவி வர நிச்சயம் நீங்கள் விரும்பக் கூடிய பளபளப்பான அழகிய முகத்தை பெறலாம். இதுபோன்ற இயற்கை முறையிலேயே எப்படி அழகிய வெண்மையான முகத்தை தக்கவைத்துக் கொள்ளலாம் என்பதை கடைபிடியுங்கள்.

ஆனால் செயற்கை முறையில் ஒரு கிரீம் வாங்கி நீங்கள் உபயோகப்படுத்தும் பொழுது ஒரே வாரத்தில் கிடைக்கக்கூடிய வெண்மை இயற்கை முறையில் கிடைக்காது. இயற்கை முறை அழகு சாதனங்களைப் பயன்படுத்தும் பொழுது அதற்கான பயன் மூன்று வாரங்களுக்குப் பின்பு தான் நன்கு தெரிய ஆரம்பிக்கும். ஆனால் செயற்கை க்ரீம்கள் ஒரு வாரத்தில் கொடுக்கக்கூடிய பலன் இரண்டே நாட்களில் உபயோகிக்காமல் இருந்தால் சென்று விடுவது போல இயற்கையில் அவ்வாறு நடக்காது. உங்களுக்கு அந்த மூன்று வாரத்தில் கொடுக்கப்பட்ட கலர் அப்படியேதான் இருக்கும். நீங்கள் ஒரு வாரம் கழித்து மீண்டும் உபயோகிக்கும் பொழுது நிறம் கூட தான் செய்யுமே தவிர, அப்படி ஏதும் இருக்காது. தொடர்ச்சியாக பயன்படுத்தலாம் என்றும் இயற்கையை நம்பி உபயோகிக்கலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்