விபத்தில் ஒற்றை காலை இழந்த கோலா கரடி – செயற்கை கால் பொருத்தி அசத்திய ஆஸ்திரேலிய மருத்துவர்!
ஆஸ்திரேலிய காட்டுத்தீயில் சிக்கி ஒற்றை காலை இழந்த குட்டி கோலா கரடிக்கு அந்நாட்டிலுள்ள பல் மருத்துவர் ஒருவர் செயற்கை கால் பொருத்தி அசத்தியுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் முக்கிய சின்னமாக கருதப்படக்கூடிய கோலா கரடிகள் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும். யூகலிப்டஸ் மரத்தின் இலைகளை உணவாக உண்ண கூடிய இந்த கரடிகள் எப்பொழுதும் மரத்தின் மீது அமர்ந்த வண்ணம் தான் காணப்படும். எனவே இது வாழ்வதற்கு முக்கிய ஆதாரமாக கை கால்கள் நிச்சயம் தேவை. இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 50 கோடிக்கும் மேற்பட்ட விலங்குகள் அண்மையில் இறந்துள்ள நிலையில், பல்லாயிரக்கணக்கான விலங்குகள் காயமடைந்து உயிர் தப்பியது.
இவ்வாறு 2017 ஆம் ஆண்டு ஒரு விபத்தில் சிக்கி மருத்துவர் செவிலியர் மார்லி கிறிஸ்டியன் என்பவரால் மீட்கப்பட்ட குட்டி கோலா கரடி ஒன்றிற்கு செயற்கை காலை பொருத்தியுள்ளார். ஒற்றைக்கால் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்த இந்த குட்டி கோலா கரடிக்கு செயற்கையான பாதத்தை உருவாக்குவதற்காக இந்த மருத்துவர் மிகவும் போராடி உள்ளார். பல்வேறு தோல்வியுற்ற முயற்சிகளுக்குப் பிறகு தற்பொழுது இளஞ்சிவப்பு நிறத்தில் அட்டகாசமாக செயற்கை காலை பொருத்தி சாதனை படைத்துள்ளார். பல் மருத்துவரான இவர் செயற்கை காலை உருவாக்கி கோலா கரடிக்கு புதுவாழ்வு கொடுத்துள்ளார். தற்பொழுது இந்த குட்டிக் கரடி மகிழ்ச்சியுடன் மரங்களில் ஏறி விளையாடுவதும் குறித்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வரும் நிலையில், மருத்துவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.