உடலில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் தேங்காய் பூ…!
தேங்காய் பூவில் உள்ள மருத்துவ குணங்கள்.
நம்மில் சிறியவர்கள் முதல் முதியோர்கள் தேங்காய், இளநீர் போன்றவற்றை அறிந்திருக்கலாம். ஆனால் தேங்காய்ப்பூ என்பது சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. தேங்காய்ப்பூ என்பது முற்றிய தேங்காயில் உண்டாகும் கரு வளர்ச்சி ஆகும். தேங்காய் மற்றும் இளநீரில் இருப்பதை விட இந்த தேங்காய்ப்பூ அதிகமாக சத்துக்கள் உள்ளது.
தேங்காய்ப்பூ இளநீரில் இருக்கும் சதைப் பற்றை போல ருசியுடன் இருக்கும். இந்த தேங்காய் பூவில் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த கூடிய பல வகையான சத்துக்கள் உள்ளது. இன்று பலரும் நோய்த் தொற்றுகளுக்கு பாதிக்கப்பட்ட மிக முக்கியமான காரணம் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு தான். இந்த தேங்காய் பூவை நாம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை மலச்சிக்கல், செரிமானக் கோளாறு போன்ற பிரச்சனைகளை சந்திப்பது உண்டு. இந்த பிரச்சனை உள்ளவர்கள் தேங்காய் பூவை சாப்பிட்டு வந்தால், நமது குடல் வலிமை பெறுவதோடு, செரிமானக் கோளாறு மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளையும் தடுக்கிறது.
தேங்காய்ப்பூ நமது ரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரையை கட்டுப்படுத்தி, இன்சுலின் சுரப்பை தூண்டுகிறது. மேலும் இதயத்தில் தேங்ககூடிய கொழுப்பை கரையச் செய்து, மாரடைப்பு போன்ற இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. இது இரத்தத்தில் சேரும் கெட்ட கொழுப்பை கரைக்கிறது.
தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் தேங்காய் பூவே சாப்பிட்டு வந்தால் இது தைராய்டு சுரப்பி ஒழுங்குபடுத்துவது ஒரு தைராய்டு பாதிப்பையும் குணப்படுத்துகிறது உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் தேங்காய் பால் சாப்பிடலாம். ஏனென்றால், தேங்காய் பூவில் குறைந்த அளவு கலோரிகள் உள்ளது. எனவே இது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை வேகமாக கரைய செய்து உடல் எடையும் குறைகிறது.