இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் கோப்ரா திரைப்படத்தின் இரண்டாவது லூக் போஸ்டரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளனர்.
இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துவரும் திரைப்படம் கோப்ரா. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இந்திய கிரிக்கெட் வீரர் இப்ரான் பதான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் இசையில் உருவாகும் இந்த திரைப்படம் கடந்த மே மாதம் வெளியாகவிருந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி சென்றது.
இந்த படத்திற்கான 1 பாடல்கள் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இன்று கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் கோப்ரா திரைப்படத்தின்அப்டேட் கொடுத்துள்ளார்கள்.
ஆம், கோப்ரா படத்தின் பர்ஸ்ட் லூக் போஸ்டரை தொடர்ந்து தற்போது இரண்டாவது லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இதனால் விக்ரம் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளார்கள் மேலும் இந்த இரண்டாவது ஒரு போஸ்டரில் நடிகர் விக்ரம் வித்தியாசமான தோற்றத்தில் உள்ளதால் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகமாகியுள்ளது.
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை இன்று…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பை வழங்குவதாக…
கோவை : அண்மைக்காலமாக தெருநாய் கடிபற்றிய செய்திகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு போதிய நடவடிக்கை…
சான் பிரான்சிஸ்கோ : பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) நேற்று இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் இருந்து…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா - பெசாவருக்கு ஜாபர் விரைவு ரயில் 450 பேருடன் சென்றது.…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…