கோப்ரா பட இயக்குநரான அஜய் ஞானமுத்து தனது சம்பளத்தில் 40 சதவீதம் வரை குறைத்ததாக கூறப்படுகிறது.
விக்ரம் தற்போது நடித்து வரும் திரைப்படம் கோப்ரா. இதில் விக்ரம் ஏழு வேடங்களில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தினை இமைக்கா நொடிகள் படத்தினை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கி ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தில் விக்ரமுக்கு வில்லனாக பிரபல கிரிக்கெட் வீரரான இர்பான் பதான் நடிக்கிறார்.மேலும் ஸ்ரீநிதி ஷெட்டி, லால், மிர்னாலினி, பத்மபிரியா, கனிகா, பாபு ஆன்டனி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் வியாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் குமார் இந்த படத்தை தயாரிக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
ரஷ்யாவில் படப்பிடிப்புகள் நடைப்பெற்று கொண்டிருந்த போது கொரோனா தொற்று பரவ ஷூட்டிங் தடை செய்யப்பட்டது. சமீபத்தில் கோப்ரா படத்திலிருந்து பர்ஸ்ட் சிங்கிளான ‘தும்பி துள்ளல்’ என்ற அழகான பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது .இந்த நிலையில் தற்போது இயக்குநர் ஞானமுத்து, இந்த கொரோனா ஊரடங்கில் அதிகமாக பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்க ளின் நிலையை மனதில் கொண்டு தனது சம்பளத்தில் 40 சதவீதத்தை குறைத்துள்ளார். அதாவது 1.25கோடி வரை தனது சம்பளத்தில் குறைத்து தயாரிப்பாளருக்கு உதவியுள்ளதாக கூறப்படுகிறது.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…