அடுத்து எந்தெந்த நாடுகளில் விக்ரமின் ‘கோப்ரா’ வளரவுள்ளது தெரியுமா?!

Default Image
  • விக்ரம் நடிப்பில் அவரது 58ஆவது திரைப்படமாக கோப்ரா திரைப்படம் தயாராகி வருகிறது.
  • இப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார். ஸ்ரீநிதி ஷெட்டி ஜோடியாக நடித்துள்ளார்.

விக்ரம் நடித்து வரும் அவரது 58வது திரைப்படம் கோப்ரா. இந்த திரைப்படத்தை இமைக்காநொடிகள் படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கிவருகிறார். கே.ஜி.எஃப் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த ஸ்ரீநிதி செட்டி நடித்திவருகிறார். இப்படத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்து வருகிறார்.

இப்படத்துக்கான முதல்பாதி முழுவதும் இந்தியாவில் படமாக்கப்பட்டது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாதி வெளிநாடுகளில் படமாக்கப்பட உள்ளதாம். ரஷ்யா, ஐரோப்பிய நாடுகளில் இப்பட சூட்டிங் நடைபெற உள்ளதாம். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இப்படம் கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது என அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த வருடம் கோடை விடுமுறை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமைய உள்ளது தற்போது உறுதியாகியுள்ளது. தளபதி 64, சூரரை போற்று ஆகிய படங்களும் கோடை விடுமுறையை குறிவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்