ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த புதிய அப்டேட்! விக்ரம் 58 படத்தின் அசத்தல் தலைப்பு!
- சியான் விக்ரம் தற்போது அவரது 58வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- இந்த படத்தை இமைக்கா நொடிகள் பட இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார்.
சியான் விக்ரம் தற்போது அவரது 58வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தினை அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார். இவர் இதற்கு முன்னர் இமைக்கா நொடிகள் படத்தை இயக்கி இருந்தார்.
இந்த படத்தில் ப்ரியா பவானிசங்கர், முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் பெயர் அன்வர் என கூறப்பட்டு வந்தது. ஆனால் அதனை படக்குழு நிராகரித்தனர்.
தற்போது இப்படத்திற்கு படக்குழுவினர் கோப்ரா என தலைப்பு வைத்துள்ளனர். இதனை அதிகாரபூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் 2020 கோடை விடுமுறையில் இப்படம் வெளியாகும் என கூறப்படுகிறது. அதே கோடை விடுமுறையை கணக்கிட்டு விஜயின் 64வது திரைப்படம், சூர்யாவின் சூரரை போற்று என பல படங்கள் ரிலீசிற்கு காத்திருக்கின்றன.