நடிகர் விக்ரம் பொன்னியின் செல்வன் படத்தில் பிசியாக இருப்பதால் அவர் இல்லாத காட்சிகளை படமாக்க கோப்ரா படத்தின் படக்குழு ரஷ்யாவின் மாஸ்கோவிற்கு சென்றுள்ளார்கள்.
நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் கோப்ரா.ஸ்ரீநிதிஷெட்டி, இர்பான் பதான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தில் விக்ரம் பல வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.இந்த படத்தை இமைக்கா நொடிகள் என்ற வெற்றி படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்க 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
படத்திலிருந்து முதல் பாடல் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து படத்தில் நடிகை ஸ்ரீநிதிஷெட்டி இடம்பெற்ற காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் படத்தின் முழு படப்பிடிப்பு முடிக்க தற்போது கோப்ரா படத்தின் படக்குழு ரஷ்யாவின் மாஸ்கோவிற்கு சென்று படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது.
மேலும் விக்ரம் இந்த படப்பிடிப்பில் கலந்துகொள்ள வாய்ப்பில்லைஏனெனில், விக்ரம் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மிகவும் பிரமாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருவதால் பிசியாக உள்ளார். அதுவரை கோப்ரா படக்குழு விக்ரம் இல்லாத காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விரைவில் பொன்னியின் செல்வன் படத்திற்கான படப்பிடிப்பை முடித்து கொடுத்துவிட்டு கோப்ரா படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…