புதுச்சேரி மாநில பள்ளி கல்வி இயக்ககம் மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் `நவீன கால கற்பித்தலின் பரிணாமம், சவால்கள் மற்றும் வாய்ப்புகள்’ என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தியல் கூட்டம் புதனன்று நடந்தது. இந்நிகழ்ச்சியை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். அப்போது அவர் அந்த நிகழ்ச்சியில், புதுவையில் கடந்த 2016ம் ஆண்டில் புதிய தொழிற்கொள்கையை கொண்டுவந்தோம். அதுமட்டுமில்லாமல் பெட்ரோல், டீசல் வாகனங்களால் காற்று மாசு ஏற்படுவதை தடுக்க, காற்று மாசு ஏற்படுத்தாத மின்சார வாகனங்களை இயக்குவதற்கு அந்த கொள்கையில் சலுகை வழங்கவும் நடவடிக்கை எடுத்தோம். இதனால் 500 தொழிற்சாலைகள் சென்னையில் இருந்து புதுச்சேரி வரவுள்ளது. ஆனால் நமது கவர்னர் கொடுக்கும் தொல்லையால் இரவில் எனக்கு தூக்கம் வருவதில்லை. புதுவையில் எந்த வேலையும் நடக்கக்கூடாது என்று தடுக்கும் ஒரு கூட்டம் உள்ளது. நான், அதிகாரிகளையும் சேர்த்துத்தான் சொல்கின்றேன் என்றார். மேலும், டெல்லி மற்றும் கவர்னர் தொல்லையை மீறி மத்திய அரசிடமிருந்து சிறப்பான நிர்வாகம் மனிதவள மேம்பாட்டிற்கும் விருது வாங்கியுள்ளோம். நமது கைகள் கட்டப்பட்டு உள்ள நிலையிலேயே இவ்வளவு என்றால்,எங்களை சுதந்திரமாக விடப்பட்டிருந்தால் புதுவையை எப்படி முன்னேறியிருக்கலாம். புதுச்சேரியை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல வாய்ப்பும், சூழல் உள்ளது. நிதி தேவைப்படுகிறது. மத்திய அரசு நமக்கு தர வேண்டிய நிதியை கூட கடந்த 3 ஆண்டுகளாக தரவில்லை. என்று சற்று காட்டமாக குறிப்பிட்டார்..
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…