ராகவா லாரன்ஸ், 3385 தூய்மை பணியாளர்களுக்கு 25 லட்சத்தை நிதியுதவியாக வழங்கி உதவியுள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகமாக நிதியுதவி வழங்கியவர் ராகவா லாரன்ஸ் என்பது அனைவரும் அறிந்ததே. இதுவரை 4 கோடிக்கு மேல் நிதியுதவி வழங்கியுள்ளார். இவர் ஏற்கனவே தான் நடிக்கும் அடுத்த படத்தின் தயாரிப்பாளரான கதிரேசனிடம் தனக்கு தர வேண்டிய சம்பளத்தில் ரூ. 25 லட்சத்தை தூய்மை பணியாளர்களுக்கு வழங்குமாறும், அதனை நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கோரியும் கேட்டதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது தயாரிப்பாளர் கதிரேசன் ராகவா லாரன்ஸ் அவர்களின் கோரிக்கையின் படி,ரூ. 25 லட்சத்தை 3385 தூய்மை பணியாளர்களுக்கு வழங்கியதாக அறிவித்துள்ளார். அவர் ராகவா லாரன்ஸ் அவர்களுக்கு எழுதிய அறிக்கையில் கூறியதாவது, தனது சம்பளத்தில் 25 லட்சம் ரூபாயினை தூய்மை பணியாளர்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் நேரிடையாக செலுத்தி விடுமாறு தாங்கள் கேட்டு கொண்டதன்படி 3385தூய்மை பணியாளர்களின் அடையாள அட்டையின் பெயரில் இருக்கும் வங்கி கணக்குகள் உறுதி செய்யப்பட்டு, அனைவரின் வங்கி கணக்கிலும் பணம் சென்றடைந்து விட்டது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். அதனுடன் எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்றும், எத்தனை பேருக்கு கொடுக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.தற்போது ராகவா லாரன்ஸ் தயாரிப்பாளர் கதிரேசன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளார். தற்போது ராகவா லாரன்ஸிற்கு தூய்மை பணியாளர்கள் அனைவரும் தங்களது நன்றிகளை தெரிவித்து வருகின்றனர்.
</p
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…