தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்து கைப்பற்றிய நகரம் ..!
சிரியாவில் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்த டமாஸ்கஸ் நகரின் தெற்கு பகுதியை, 7 ஆண்டுகளுக்கு பின், கைப்பற்றி உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக கடும் தாக்குதலை நடத்திவரும் சிரிய ராணுவம், பல்வேறு பகுதிகளை மீட்டு வருகிறது.
தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் சுற்றுவட்டார நகரங்களை முழுமையாக கைப்பற்றும் நோக்கில் அண்மை காலமாக வான்வழி தாக்குதலை ராணுவம் தீவிரப்படுத்தியது.
இந்நிலையில், தலைநகரின் தெற்கு பகுதியான அல் ஹஜர் அல் அஸ்வட் மாவட்டத்தை ராணுவம் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது