ஆஸ்திரேலியாவின் குடியுரிமை மற்ற நாடுகளை விட இந்தியாவுக்கு தான் அதிகம்!
ஆஸ்திரேலியாவில் இந்திய நாட்டு மக்களுக்கு தான் குடியுரிமை வழங்குவதில் அதிகம் முன்னுரிமை வழங்கப்படுகிறதாம்.
ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு சென்று, பல்வேறு காரணங்களால் அந்த நாட்டு குடியுரிமை பெற வேண்டும் என விண்ணப்பம் செய்பவர்கள் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்து வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நார்வே பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் குடியுரிமை கோரி பல லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2019 முதல் 2020 வரை உள்ள ஆஸ்திரேலிய அகதிகள் இரண்டு லட்சம் பேருக்கு இந்த வருடம் ஆஸ்திரேலியக் குடியுரிமை கொடுத்துள்ளது.
இதில் 38,209 பேர் இந்தியர்கள் தானாம், கடந்த ஆண்டை காட்டிலும் 60 சதவீதம் இந்தியர்கள் அதிகமாக இந்த ஆண்டு குடியுரிமை பெற்றுள்ளனர். இதுகுறித்து அந்நாட்டின் குடியுரிமை மற்றும் கலாச்சார விவகாரங்கள் தொடர்பான அமைச்சர் ஆலன் டுட்ஜ் அவர்கள் கூறுகையில், வெளிநாட்டினர் ஆஸ்திரேலியாவில் குடியுரிமை பெற விரும்புவதற்கான காரணம் அவர்கள் இந்த நாட்டின் மீது கொண்டுள்ள நம்பிக்கை மற்றும் மதிப்பீடுதான். கொரோனா காலகட்டத்திலும் குடியுரிமை சேவை அமைச்சகம் ஆன்லைன் மூலம் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு குடியுரிமை வழங்கி உள்ளது என அவர் கூறியுள்ளார்.