குடிமக்கள் பாதுகாப்பாக இருக்கவும்.. வெளிநாடுகளிலும் கவனம் முக்கியம்.. அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை.!

Default Image

அல்கொய்தா தலைவன் கொல்லப்பட்டதை தொடர்ந்து அமெரிக்க பொதுமக்கள் பாதுகாப்பாக விழிப்புடன் இருக்க வேண்டும். – அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை. 

ஆப்கானிஸ்தானில் பதுங்கி இருந்த  அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின்  தலைவரும் ஒசாமா பின்லேடனின் இரண்டாவது தளபதியுமான அய்மான் அல்-ஜவாஹிரியை அண்மையில், அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானம் மூலம் தாக்கியதில் கொல்லப்பட்டார்.

அதனால், தற்போது அமெரிக்க உளவுத்துறை ஓர் தகவலை தெரிவித்துள்ள்ளது. அது தகவல் அல்ல எச்சரிக்கை. அதாவது, அல்கொய்தா அமைப்பின் தலைவன் தாக்கப்பட்டதால், அந்த அமைப்பின் மூலம் ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்படலாம்.

ஆதலால், அமெரிக்க பொதுமக்கள் பாதுகாப்பாக விழிப்புடன் இருக்க வேண்டும். மேலும், வெளிநாடு செல்வோர், வெளிநாட்டில் வசிக்கும் அமெரிக்காவாசிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் எச்சரித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்