இயக்குனர் ஸ்ரீராம் முயற்சியில் உருவாகக்கூடிய சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் வாழ்க்கை வரலாற்று மேடை நாடகத்தில் தீரன் சின்னமலை கதாபாத்திரத்தில் நடிகர் சிபிராஜ் அவர்கள் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஆங்கிலேயர்களுக்கு எதிரான இந்திய சுதந்திர போராட்டத்தின் போது முக்கியமான விடுதலைப் போராளியாக இருந்தவர் தான் தீரன் சின்னமலை. இந்நிலையில், இயக்குனர் ஸ்ரீராம் அவர்கள் அவரது வாழ்க்கை வரலாற்றை மேடை நாடகமாக உருவாக்கும் முயற்சியை தற்போது மேற்கொண்டுள்ளார்கள். இந்த நாடகத்தில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை வேடத்தில் நடிகர் சிபிராஜ் அவர்கள் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இதுகுறித்து நடிகர் சிபிராஜ் கூறுகையில், இந்திய சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை மிகச்சிறந்த வீரர் அவரது வரலாற்றில் நடிப்பது மகிழ்ச்சியான விஷயம் என கூறியுள்ளார்.
அதுவும் நாடகத்தில் நடிப்பது இன்னும் ஒரு புதுவிதமான அனுபவத்தை தரும் என்று நம்புகிறேன், சினிமாவில் தவறு செய்யும்பொழுது மறுபடியும் டப்பிங்கில் சரி செய்து விடலாம். ஆனால் மேடை நாடகத்தில் அவ்வாறு சரி செய்துவிட முடியாது என்பது எனக்கு தெரியும், இருப்பினும் இது எனது வளர்ச்சிக்கு மிக உதவியாக இருக்கும் என நம்புகிறேன். ஏன் என்றால் மிகப் பெரிய நடிகர்கள் ஆகிய எம்ஜிஆர் சிவாஜி மற்றும் எனது தந்தை சத்யராஜ் உட்பட பலரும் மேடை நாடகத்தில் நடித்துதான் சினிமாவிற்கு வந்துள்ளார்கள். ஆனால் தற்போதைய நடிகர்கள் மேடை நாடகங்களை முற்றிலும் புறக்கணித்து வருகின்றனர். இதை உணர்ந்துதான் நான் தற்பொழுது மேடை நாடகத்தில் நடிக்க சம்மதித் இருக்கிறேன் என சிபிராஜ் கூறியுள்ளார்.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தஞ்சாவூர். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,…
பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், 50…
சென்னை : சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, அவரது சென்னை இல்லத்தில் போலீஸ் சம்மன் ஒட்டினர்.…
சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…
சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…