ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் பிப்.24ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
போனிகபூர் தயாரிப்பில், வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் கடந்த பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா மற்றும் பரவல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்தப் படம் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது. இந்தியா முழுவதும் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக பள்ளி, கல்லூரிகள் என மூடப்பட்டு, திரையரங்குகளில் 50% மட்டுமே அனுமதி போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டது. இதனால் பிரமாண்ட படங்கள் அனைத்தும் தள்ளிவைக்கப்பட்டது.
தற்போது கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, இந்திய திரையுலகில் இந்த ஆண்டின் மிக பிரமாண்டமான படம் என்ற பெருமையையுடன் தயாராகியுள்ள ஆர்ஆர்ஆர் திரைப்படம் மார்ச் 25-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது. ஆனால், தமிழ் சினிமா ரசிகர்கள், அஜித் குமாரின் வலிமை படத்தின் ரிலீஸ் எப்போது என்று எதிர்பார்த்து காத்திருந்தனர்.
ஏனெனில் வலிமை திரைப்படம் மட்டுமல்லாமல் அஜித்திற்கு கிட்டத்தட்ட நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியாகியுள்ள படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் சினிமா ரசிகர்கல் காத்திருக்கிறார்கள். அதன்படி, தமிழகத்தில் நேற்று முதல் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு, பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. வரும் 15-ஆம் தேதி திரையரங்குகளில் 50% மட்டுமே அனுமதி அளித்திருந்தாலும், இதன் பிறகு 100% அனுமதி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இதனால் அஜித்தின் வலிமை திரைப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். இந்த நிலையில், ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் பிப்.24ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர், வலிமை திரைப்படம் பிப்.24ம் தேதி உலக முழுவதும் உள்ள திரையரங்குகளில் தமிழ், ஹிந்தி, கன்னட மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் வெளியாகிறது என்று போஸ்டர்-யுடன் அறிவித்துள்ளார்.
அஜித்தின் வலிமை படத்தின் வெளியீடு தேதி அறிவிப்பை தொடர்ந்து ரசிகர்கள் உற்சாகத்தோடு கொண்டாடி வருகின்றனர். ட்விட்டரில் #ValimaiFromFeb24 என்ற ஹாஷ்டேக்கை ட்ரண்ட் செய்தும் வருகிறார்கள்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…