#CinemaBreaking: “ஆர்.ஆர். ஆர் ” படத்தின் புதிய அப்டேட்..! உற்சாகத்தில் ரசிகர்கள்.!!
ஆர்ஆர்ஆர் படத்தில் ஆலியா பட் நடிக்கும் கதாபாத்திரம் குறித்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற 15 ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
இயக்குனர் ராஜமௌலி பாகுபலியின் பிளாக் பஸ்டர் வெற்றிக்கு பின் தற்போது ‘ஆர்ஆர்ஆர்'(ரத்தம், ரணம், ரௌத்திரம்) எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.பான்-இந்தியா படமாக உருவாகும் “ஆர்ஆர்ஆர்”-இல் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி , ஸ்ரேயா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.மேலும் பல ஹாலிவுட் பிரபலங்களும் நடிப்பதாக கூறப்படுகிறது.
தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகி வரும் ஆர்ஆர்ஆர் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பானது தற்போது ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது வருகின்ற 15 ஆம் தேதி காலை 11 மணிக்கு இந்த படத்தில் ஆலியா பட் நடிக்கும் கதாபாத்திரம் குறித்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
Meet our #Sita in all her glory. ✨
First look of @Aliaa08 will be revealed on March 15, 11 AM. #RRRMovie #RRR@ssrajamouli @tarak9999 @AlwaysRamCharan @ajaydevgn @oliviamorris891 @DVVMovies pic.twitter.com/6sYLzfY3Ou
— RRR Movie (@RRRMovie) March 13, 2021