யோகிபாபு செம பிஸி…!! ரஜினியின் தர்பார் படப்பிடிப்பு..!!!பாபுவக்காக காத்திருந்த ரஜினி…!! சுவாரசியமான தகவல்கள்..!!
- பொங்கலுக்கு முன்னதாக வெளிவர இருக்கும் தர்பார்.
- இப்பட படப்பிடிப்பிற்காக ரஜினியின் பெருந்தன்மை.
தற்போது, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்கும் தர்பார் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், தலிப் தாஹில், யோகிபாபு, மனோபாலா மற்றும் சுமன் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார். இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு வட மாநிலங்களில் நடந்து முடிந்துள்ளது.
இந்நிலையில் தர்பாரின் கடைசி நாள் படப்பிடிப்பு, சென்னையில் சனிக்கிழமை நடந்தது. இதில் யோகிபாபு, ரஜினிகாந்த் உட்பட பலர் பங்குபெற்றனர்.இதில், நகைச்சுவை நடிகரான யோகிபாபு தற்போது செம பிசியாகிவிட்டதால் அவர் கால்ஷீட் மட்டும் கிடைக்கவே இல்லை.எனவே இந்த படத்தின் படப்பிடிப்பு அவருக்காக காத்திருந்து நடந்ததாக கூறப்படுகிறது.மேலும் யோகிபாபு வரும்போது படப்பிடிப்பை வைத்துக்கொள்ளலாம் என்று ரஜினிகாந்த் சொல்லி இருக்கிறார். எனவே, ரஜினியின் இந்த பெருந்தன்மையை பார்த்து யோகி பாபு வியந்து மனம் நெகிழ்ந்ததாக கூறப்படுகிறது.இந்த தர்பார் படம் வரும் பொங்கலுக்கு முன்னதாக ஜனவரி 9-ந்தேதி திரைக்கு வர இருக்கிறது.